சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Petani; ஆங்கிலம்: Sungai Petani Federal Constituency; சீனம்: 双溪大年联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோலா மூடா மாவட்டத்தில் (Kuala Muda District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P015) ஆகும்.
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
சுங்கை பட்டாணி (P015) மலேசிய மக்களவைத் தொகுதி கெடா | |
---|---|
Sungai Petani (P015) Federal Constituency in Kedah | |
சுங்கை பட்டாணி மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | கோலா மூடா மாவட்டம்; கெடா |
வாக்காளர் தொகுதி | சுங்கை பட்டாணி தொகுதி |
முக்கிய நகரங்கள் | சுங்கை பட்டாணி |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
நீக்கப்பட்ட காலம் | 1959 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமது தௌபிக் சொகாரி (Mohammed Taufiq Johari) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 168,847 |
தொகுதி பரப்பளவு | 261 ச.கி.மீ |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
சுங்கை பட்டாணி தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பட்டாணி தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1]