சுன்சுனூ மாவட்டம்
இராசத்தானில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சுன்சுனூ மாவட்டம் (Jhunjhunu district) (இந்தி:झुन्झुनू जिला) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் சுன்சுனூ ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதியில் அமைந்த இம்மாவட்டம் ஜெய்பூர் கோட்டத்தில் உள்ளது. இந்திய அளவில் இம்மாவட்டம் இந்திய இராணுவத்திற்கு அதிக வீரர்களை அனுப்பிய பெருமை உடையது. இம்மாவட்டத்தின் பிலானி நகரத்தில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம், உலக அள்வில் பெயர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமாகும்.
விரைவான உண்மைகள் 75.02°N 76.06°E / - 27.38°N 28.31°E /, மாநிலம் ...
சுன்சுனூமாவட்டத்தின் இடஅமைவு இராஜஸ்தான் | |
75.02°N 76.06°E / 75.02; 76.06 - 27.38°N 28.31°E / 27.38; 28.31 | |
---|---|
மாநிலம் | இராஜஸ்தான், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | ஜெய்பூர் |
தலைமையகம் | சுன்சுனூ |
பரப்பு | 5,928 km2 (2,289 sq mi) |
மக்கட்தொகை | 2,137,045 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 361/km2 (930/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 22.89% |
படிப்பறிவு | 74.13% |
பாலின விகிதம் | 950 |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | சுன்சுனூ[1] |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 [2] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | மாநில நெடுஞ்சாலை எண் 8 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு