சோனி பிக்சர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) என்பது அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனம் ஆகும். இது பல தளங்களில் படமாக்கப்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நிகழ்ப்பட ஆட்டம் போன்ற பல பொழுதுபோக்கு சார்ந்த அம்சங்களை தயாரித்து மற்றும் விநியோகம் செய்துவருகிறது.
வகை | துணை |
---|---|
நிறுவனர்(கள்) | சோனி |
தலைமையகம் | சோனி பிக்சர்ஸ் ஸ்டுடியோஸ், கல்வர் சிட்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் |
|
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் |
|
சேவைகள் |
|
வருமானம் | US$9.133 பில்லியன் |
இயக்க வருமானம் | US$376 மில்லியன் |
பணியாளர் | 9,500 |
தாய் நிறுவனம் | சோனி என்டர்டெயின்மென்ட் |
பிரிவுகள் |
|
[1][2] |
இது சோனி என்டர்டெயின்மென்ட் இன்க் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயக்கப்படுகிறது மற்றும் பன்னாட்டு தொழில்நுட்பம் மற்றும் ஊடக நிறுவனமான சோனி கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாகும்.[3] இந்த நிறுவனம் கலிபோர்னியாவின் கல்வர் சிட்டியில் உள்ள முன்னாள் மெட்ரோ கோல்ட்வின் மேயர் இடத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது சோனி நிறுவனத்தின் திரைப்படங்கள், தொலைக்காட்சி உற்பத்தி மற்றும் விநியோக பிரிவை உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். இதன் குழு விற்பனை 2017 நிதியாண்டில் (ஏப்ரல் 2017 - மார்ச் 2018) 13 9.133 பில்லியனாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.