ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம்
இந்தோனேசியாவில் உள்ள அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் (Jakarta History Museum) இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் கோட்டா டுவா என்றழைக்கப்படுகின்ற பழைய டவுன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் படாகில்லா அருங்காட்சியகம் என்றும் படேவியா அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிறது.ஜகார்த்தா, இந்தோனேஷியா. அருங்காட்சியகத்திற்கான இந்தக் கட்டிடமானது 1710 ஆம் ஆண்டில் படேவியாவின் சிட்டி அரங்கம் என்ற நிலையில் கட்டப்பட்டது. ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் 1974 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நகர வரலாறு, 1527 ஆம் ஆண்டு ஜெயகார்த்தா நகரம் அமைதல், மற்றும் 16 ஆம் நூற்றாண்டு முதல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்ற காலமான 1945 ஆம் ஆண்டு வரையிலான டச்சு காலனித்துவ காலம் ஆகியவற்றைக் கொண்ட பொருள்களைக் கொண்டு அமைந்துள்ளது.
அருங்காட்சியகத்தின் முகப்பு | |
நிறுவப்பட்டது | 1707 |
---|---|
அமைவிடம் | ஜகார்த்தா, இந்தோனேசியா |
வகை | அருங்காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | 69,708 (2006)[1] 75,067 (2007)[1] |
வலைத்தளம் | http://www.indonesia-tourism.com/jakarta/jakarta-history-museum.html |
இந்த அருங்காட்சியகம் (முன்னாள் படேவியா நகர சதுக்கம் என்றழைக்கப்பட்ட) ஃபத்தாஹில்லா சதுக்கத்தின் தெற்கே வயாங் அருங்காட்சியகம் மற்றும் ஃபைன் ஆர்ட் மற்றும் பீங்கான் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் ஆம்ஸ்டர்டாம் நகரில் அமைந்துள்ள ராயல் அரண்மனையைப் போன்ற வடிவில் அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[2]