ஜிஜே 1241 பி
From Wikipedia, the free encyclopedia
ஜிஜே 1214 பி (GJ 1214 b) என்பது ஜிஜே 1214 என்ற விண்மீனைச்ச் சுற்றி வரும் ஒரு புறக்கோள். இந்த விண்மீன் சூரியனில் இருந்து 13 பார்செக் ((அண்னளவாக 48 ஒளி ஆண்டு) தூரத்தில் உள்ளது. இந்தப் புறக்கோள் 2009 டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியை விடப் பெரியதும், நமது சூரிய மண்டலத்தில் உள்ள வளிமக் கோள்களை ஆரையிலும், திணிவிலும் சிறியதாகவும் இருப்பதால் இது மேன்மையான-பூமி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொரொட்-7பி என்ற புறக்கோளுக்கு அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பட்ட மேன்மையான பூமி இதுவாகும்[1]. இதன் விண்மீன் ஒப்பீட்டலவில் நமது சூரியனுக்குக் கிட்டவாக உள்ளதால் இது பெருமளவு முக்கியத்துவம் பெறுகிறது. 2012 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி இக்கோள் பெருமளவு நீரினால் ஆனது என ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது[2].
மேலதிகத் தகவல்கள் புறக்கோள், தாய் விண்மீன் ...
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
தாய் விண்மீன் | ||
விண்மீன் | ஜிஜே 1214 | |
விண்மீன் தொகுதி | ஒஃபியூச்சுஸ் | |
வலது ஏறுகை | (α) | 17h 15m 18.94s |
சாய்வு | (δ) | +04° 57′ 49.7″ |
தோற்ற ஒளிப்பொலிவு | (mV) | 14.67 |
தொலைவு | 48 ஒஆ (13 புடைநொடி) | |
அலைமாலை வகை | M4.5 | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.0143 ± 0.0019 AU |
மையப்பிறழ்ச்சி | (e) | < 0.27 |
சுற்றுக்காலம் | (P) | 1.5803925 ± 0.0000117 நா (0.004326803 ஆ) |
சுற்றுக்காலம் | (υ) | 99 கிமீ/செ]] |
சாய்வு | (i) | 88.62+0.36 −0.28° |
Time of கடப்பு | (Tt) | 2,454,999.712703 ± 0.000126 யூநா |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 6.55 ± 0.98[1] M⊕ |
ஆரை | (r) | 2.678 ± 0.13 R⊕ |
அடர்த்தி | (ρ) | 1870 ± 400 கிகி/மீ3 |
மேற்பரப்பு ஈர்ப்பு | (g) | 0.91 g |
வெப்பநிலை | (T) | 393–555[1] கெ |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | திசம்பர் 16, 2009 | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | டேவிட் சார்பனோ, மற்றும் ஏனையோர். | |
கண்டுபிடித்த முறை | கடப்பு முறை | |
கண்டுபிடித்த இடம் | பிரெட் லாரன்சு விப்பிள் அவதான நிலையம் | |
கண்டுபிடிப்பு நிலை | வெளியிடப்பட்டது[1] | |
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
மூடு