ஜெஹோவா
From Wikipedia, the free encyclopedia
இதனையும் பார்க்க: யாவே
ஜெஹோவா /dʒ[invalid input: 'ɨ']ˈhoʊvə/ (அல்லது) யாவே என்பது கடவுளைக் குறிக்க எபிரேய விவிலியத்தில் பயன்படுத்தப்படுகின்ற சொல் ஆகும். ஆயினும் அதை எவ்வாறு ஒலிப்பது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது.
ஜெஹோவா என்னும் பெயர்வடிவம் எபிரேய மூலச் சொல்லான יהוה (YHWH) என்னும் "நாலெழுத்து" வடிவப் பெயரின் (Tetragrammaton) திபேரிய ஒலிப்பின் (יְהֹוָה) இலத்தீன் உருமாற்றுச் சொல் ஆகும்.[1][2]
எபிரேய விவிலியத்தில் கடவுளைக் குறிக்கப் பயன்படும் ஜெஹோவா (யாவே - יְהֹוָה) என்னும் சொல்லானது, மரபுவழி வருகின்ற மசோரெத்திய பாடத்தில் (Masoretic Text) 6,518 முறை வருகின்றது. மேலதிகமாக ஜெஹோவி (Jehovih) (יֱהֹוִה) என்னும் வடிவத்தில் 305 தடவை வருகிறது.[3] ஜெஹோவா என்னும் ஒலிவடிவம் கொண்ட பெயரைப் பயன்படுத்தும் மிகப் பழமையான இலத்தீன் விவிலிய பாடம் 13ஆம் நூற்றாண்டைச் சாரும்.[4]