ஜோ கார்னிசு
From Wikipedia, the free encyclopedia
ஜோசப் முர்ரே கார்னிசு (ஆங்கில மொழி: Joseph Murray Cornish) (பிறப்பு: திசம்பர் 20, 1968) என்பவர் இங்கிலாந்து நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் நகைச்சுவையாளர் ஆவார். இவர் தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வானொலிகளில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் ஜோ கார்னிசு, பிறப்பு ...
ஜோ கார்னிசு | |
---|---|
பிறப்பு | ஜோசப் முர்ரே கார்னிசு திசம்பர் 20, 1968 (1968-12-20) (அகவை 55) வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
அறியப்படுவது |
மூடு
இவர் தனது நீண்டகால நகைச்சுவை கூட்டாளியான ஆடம் பக்ஸ்டனுடன்[1] இணைந்து 'ஆடம் மற்றும் ஜோ'[2] என்ற நகைச்சுவை வானொலி நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். 2011 ஆம் ஆண்டில் 'அட்டாக் தி பிளாக்'[3] என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து எட்கர் ரைட், ஆடம் மெக்கே மற்றும் பால் ருத் ஆகியோருடன் இணைந்து ஆன்ட்-மேன் என்ற திரைப்படத்தில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.