டீம் வியூவர்
From Wikipedia, the free encyclopedia
டீம் வியூவர் (TeamViewer) என்பது கணிப்பொறி மென்பொருளாகும். இது ஒரு கணினியையோ கைப்பேசியையோ இணையத்தின் மூலம் தொலைவிலுள்ள மற்றொன்றுடன் இணைத்து, அதைக் கட்டுப்படுத்தவும் இயக்கவும் தரவுகளைப் பறிமாறிக் கொள்ளவும் உதவுகிறது. மேலும், இணையவழிக் கூட்டங்கள் நடத்தவும், இணையவழிக் கலந்துரையாடலுக்கும் பயனாகிறது. இம்மென்பொருள் 2005 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. இம்மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Microsoft Windows), ஓஎஸ் எக்ஸ் (OS X)[1][2] லினக்ஸ் (Linux)[3], ஐஓஎஸ் (iOS)[4] ஆகிய இயங்குதளங்களை அடிப்படையாகக் கொண்ட கணினிகளிலும் இயங்கும். விண்டோஸ் ஆர்டி (Windows RT)[5], விண்டோஸ் கைப்பேசியிலும் (Windows Phone)[6] ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை (Android)[7] அடிப்படையாகக் கொண்ட கைப்பேசியிலும் இயங்கும். வணிக ரீதியான பயன்பாட்டை தவிர்த்து, தனிநபர் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கிறது. வணிக நிறுவனுங்களுக்கென தனியாக கட்டணம் செலுத்திப் பெறும்படியும் உருவாக்கப்பட்டுள்ளது.[8]
உருவாக்குனர் | டீம் வியூவர் |
---|---|
அண்மை வெளியீடு | / சூன் 1 2011 (2011-06-01); 4727 தினங்களுக்கு முன்னதாக |
இயக்கு முறைமை | ஆண்ட்ராய்டு இயங்குதளம், லினக்ஸ், ஐஓஎஸ், லினக்ஸ், ஓஎஸ் எக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ், விண்டோஸ் கைப்பேசி, விண்டோஸ் ஆர்டி |
கிடைக்கும் மொழி | பன்மொழி |
மென்பொருள் வகைமை | மென்பொருள் |
உரிமம் | நிறுவனங்களுக்கு கட்டண சேவை பிறருக்கு இலவசம். |
இணையத்தளம் | TeamViewer |