டேவிட் ஏய்மிசு
பிரித்தானிய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சர் டேவிட் ஏய்மிசு (Sir David Anthony Andrew Amess; /ˈeɪmɪs/; 26 மார்ச் 1952 – 15 அக்டோபர் 2021) பிரித்தானிய அரசியல்வாதி ஆவார். இவர் 1997 முதல் 2021 இல் கொலை செய்யப்படும் வரை பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
டேவிட் ஏய்மிசு David Amess | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for சௌத்தெண்டு மேற்கு | |
பதவியில் 1 மே 1997 – 15 அக்டோபர் 2021 | |
முன்னையவர் | பவுல் சானன் |
நாடாளுமன்ற உறுப்பினர் for பாசில்டன் | |
பதவியில் 9 சூன் 1983 – 8 ஏப்ரல் 1997 | |
முன்னையவர் | ஆர்வி புரொக்டர் |
பின்னவர் | அஞ்செலா சிமித் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டேவிட் அந்தனி ஆண்ட்ரூ ஏய்மிஸ் (1952-03-26)26 மார்ச்சு 1952 பிளைசுட்டோ, எசெக்சு, இங்கிலாந்து |
இறப்பு | 15 அக்டோபர் 2021(2021-10-15) (அகவை 69) லேய், எசெக்சு, இங்கிலாந்து |
காரணம் of death | கத்திக்குத்து |
அரசியல் கட்சி | பழமைவாதக் கட்சி |
துணைவர் | யூலியா ஆர்னல்டு (தி. 1983) |
பிள்ளைகள் | 5 |
முன்னாள் கல்லூரி | போர்னிமவுத் பல்கலைக்கழகம் (இளம் அறிவியல்) |
விருதுகள் | சேர் (2015) |
இணையத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
இங்கிலாந்து, எசெக்சு நகரில் பிறந்து வளர்ந்தவர் ஏய்மிசு. பொருளியலில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற இவர் சிறிது காலம் ஆசிரியராகவும், ஆட்சேர்ப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். 1982 இல் இலண்டன் ரெட்பிர்ட்சு உள்ளூராட்சித் தொகுதியின் உறுப்பினராக பழமைவாதக் கட்சியில் இருந்து தெரிவானார்.[1] பின்னர் 1983 இல் பாசில்டன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] 1997 இல் சௌத்தென்டு மேற்குத் தொகுதியில் இருந்து உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[3] இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.
அரசாங்கத்தில், மைக்கேல் போர்ட்டிலோவின் நாடாளுமன்ற தனிப்பட்ட செயலாளராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் இவர் ஒரு பின்வரிசை உறுப்பினராக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார். பல தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களில் பணியாற்றினார். இடமகல் கருப்பை அகப்படலத்தினால் பாதிக்கப்பட்டோர்,[4] விலங்கு நலம் ஆகியவற்றில் இவர் தனது ஆதரவைத் தெரிவித்தார். நரி வேட்டை மீதான தடையை ஆதரித்தார்.[5]
இவரது அரசியல் கருத்துக்கள் சமூகப் பழமைவாத மற்றும் மரண தண்டனை மற்றும் பிரெக்சிட்டு போன்றவற்றிற்கான ஆதரவை உள்ளடக்கியது. அவர் கத்தோலிக்கராக இருந்து, கருக்கலைப்பை எதிர்த்தார்.