தஞ்சோங் பெலப்பாஸ்
இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு துறைமுகம் / From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் பெலப்பாஸ் (UN/Locode: MYTPP) (மலாய்: Pelabuhan Tanjung Pelepas; ஆங்கிலம்: Port of Tanjung Pelepas); (சுருக்கம்: PTP) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.
விரைவான உண்மைகள் தஞ்சோங் பெலப்பாஸ் Port of Tanjung Pelepas தஞ்சோங் பெலப்பாஸ்மலேசியாவில் அமைவிடம், அமைவிடம் ...
தஞ்சோங் பெலப்பாஸ் Port of Tanjung Pelepas | |
---|---|
தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | மலேசியா |
அமைவிடம் | ஜொகூர், மலேசியா |
ஆள்கூற்றுகள் | 1.366347°N 103.548367°E / 1.366347; 103.548367 |
ஐநா/லோகோட் | MYTPP[1] |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 13 மார்ச் 2000 |
துறைமுகத்தின் வகை | துறைமுகம் |
நிறுத்தற் தளங்கள் | 14 |
ஊழியர்கள் | 11,000 |
தலைவர் | டான் ஸ்ரீ காலிப் முகம்ட் நோ |
உரிமையாளர் | ஜொகூர் நிறுவகம் (Johor Corporation) |
நிர்வாகம் | தஞ்சோங் பெலப்பாஸ் நிறுவனம் |
அமைவிடம் | இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு மாவட்டம், |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 12.5 மில்லியன் TEU |
ஆண்டு கொள்கலன் அளவு | 6.2 மில்லியன் டன்கள் |
வலைத்தளம் www |
மூடு
குளோபல் தெர்மினல் நெட்வொர்க் (Global Terminal Network) எனும் உலகளாவிய கொள்கலன் முனைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகத்தின் முனையங்கள் உள்ளன. இருப்பினும் எம்.எம்.சி. (MMC Corporation Berhad) என்று அழைக்கப்படும் கொள்கலன் முனைய நிறுவனம், இந்தத் துறைமுக முதலீட்டில் 70 விழுக்காடு கொண்டுள்ளது.[2]