திபெத்திய மான்
பாலூட்டி இனம் / From Wikipedia, the free encyclopedia
Euteleostomi
திபெத்திய மான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Caprinae |
இனக்குழு: | திபெத்திய மான் |
பேரினம்: | திபெத்திய மான் Hodgson, 1834[3] |
இனம்: | P. hodgsonii |
இருசொற் பெயரீடு | |
Pantholops hodgsonii (Abel, 1826) | |
திபெத்திய மான் அல்லது செர்ரு மான் ( Tibetan antelope or chiru ) ( திபெத்தியம்: གཙོད་, Wylie: gtsod சீனம்: 藏羚羊; பின்யின்: zànglíngyáng[4]) என்பது நடுத்தர அளவுள்ள போவியட் மறிமான் ஆகும். இது திபெத்திய பீடபூமியை பூர்வாகமாக கொண்டது. இவற்றில் பெரும்பாலான எண்ணிக்கையிலானவை சீன எல்லைக்குள் வாழ்கின்றன. சில இந்திய பூட்டான் எல்லைகளில் ஆங்காங்கே வாழ்கின்றன. 150,000 க்கும் குறைவான முதிர்ந்த மான்கள் காடுகளில் எஞ்சியுள்ளன. ஆனால் தற்போது இந்த மான்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது.[1] 1980கள் மற்றும் 1990களில், நடந்த பாரிய சட்டவிரோத வேட்டையாடுதல் காரணமாக இவை பெருமளவில் அழிக்கபட்டன. இவறின் மிகவும் மென்மையான, இலகுவான, வெப்பமூட்டும் உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. பொதுவாக இவை இறந்த பிறகே இவற்றின் உரோமம் எடுக்கப்படுகிறது. ஷாஹ்தூஷ் ("நல்ல கம்பளிகளின் அரசன்" என்று பொருள்படும் பாரசீக சொல்) என்று அழைக்கப்படும் ஆடம்பர சால்வைகளை நெசவு செய்ய இவற்றின் உரோமம் பயன்படுத்தப்படுகிறது. ஷாஹ்தூஷ் சால்வைகள் பாரம்பரியமாக இந்தியாவில் திருமணப் பரிசாக வழங்கப்படுகின்றன. மேலும் ஒரு சால்வையை உருவாக்க மூன்று முதல் ஐந்து வளர்ந்த மான்களின் உரோமம் தேவைப்படும். ஷாஹ்தூஷ் தயாரிப்புகள், வணிகம் மீது வாசிங்கடன் பேராயத்தின்[2] கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இந்த ஆடம்பர பொருட்களுக்கான தேவை இன்னும் உள்ளது. இந்தியாவிற்குள், இந்தச் சால்வைகளின் மதிப்பு $1,000–$5,000 உள்ளது. சர்வதேச அளவில் இதன் விலை $20,000 வரை அதிகமாக இருக்கலாம்.[5] 1997 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் திபெத்திய மிருகங்களைப் பாதுகாப்பதற்காக ஹோஹ் சில் தேசிய இயற்கைக் காப்பகத்தை (கெகெக்சிலி என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவியது.