திமீத்ரி மெண்டெலீவ்
மெண்டலீப் / From Wikipedia, the free encyclopedia
திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dimitri Mendeleev) [2] (/ˌmɛndəlˈeɪəf/;[3] உருசியம்: Дми́трий Ива́нович Менделе́ев, பஒஅ: [ˈdmʲitrʲɪj ɪˈvanəvʲɪtɕ mʲɪndʲɪˈlʲejɪf]( கேட்க); 8 பெப்ரவரி 1834 – 2 பெப்ரவரி 1907 O.S. 27 ஜனவரி 1834 – 20 ஜனவரி 1907) ஒரு உருசிய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.[4] அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
விரைவான உண்மைகள் திமீத்ரி மெண்டெலீவ், பிறப்பு ...
திமீத்ரி மெண்டெலீவ் | |
---|---|
பிறப்பு | திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dmitri Ivanovich Mendeleev) (1834-02-08)8 பெப்ரவரி 1834 வெர்க்நீ அரீம்சயானி, உருசியப் பேரரசு |
இறப்பு | 2 பெப்ரவரி 1907(1907-02-02) (அகவை 72) புனித பீட்டர்ஸ் பேர்க் |
தேசியம் | உருசியன் |
துறை | வேதியியல், பௌதிகவியல் |
கல்வி கற்ற இடங்கள் | புனித பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகம் |
Academic advisors | குசுத்தாவ் கிர்க்காஃப் [1] |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | டிமிட்ரி பெட்ரோவிச் கொனொவலோவ் (Dmitri Petrovich Konovalov), வலெரி கெமிலியன் (Valery Gemilian), அலெக்ஸாண்டர் பேகோவ் (Alexander Baykov) |
அறியப்படுவது | தனிம அட்டவணையை உருவாக்கியமை. |
விருதுகள் | |
துணைவர் | ஃபெயோஸ்வா நிகிடிச்னா லெஷ்செவா (Feozva Nikitichna Leshcheva) (1862–1871), அன்னா இவானொவா பொபொவா (Anna Ivanova Popova) (1882) |
கையொப்பம் |
மூடு