திராங்கானு மந்திரி பெசார்
திராங்கானு மாநிலத்தின் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
திராங்கானு மந்திரி பெசார் அல்லது திராங்கானு முதல்வர் (ஆங்கிலம்: Menteri Besar of Terengganu அல்லது First Minister of Terengganu; மலாய்: Menteri Besar Terengganu; சீனம்: 登嘉楼州务大臣) என்பவர் மலேசிய மாநிலமான திராங்கானு மாநிலத்தின் அரசுத் தலைவர் ஆவார். மலேசியாவில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மந்திரி பெசார் என்று அழைப்பது வழக்கம். இவர் திராங்கானு மாநில சட்டமன்றத்தின் (Terengganu State Legislative Assembly) பெரும்பான்மைக் கட்சி அல்லது மிகப்பெரிய கூட்டணிக் கட்சியின் தலைவரும் ஆவார்.
விரைவான உண்மைகள் திராங்கானு மந்திரி பெசார் Menteri Besar of Terengganu Menteri Besar Terengganu, உறுப்பினர் ...
திராங்கானு மந்திரி பெசார் Menteri Besar of Terengganu Menteri Besar Terengganu | |
---|---|
திராங்கானு மந்திரி பெசார் கொடி | |
திராங்கானு மாநில அரசு | |
உறுப்பினர் | திராங்கானு மாநில ஆட்சிக்குழு |
அறிக்கைகள் | திராங்கானு மாநில சட்டமன்றம் |
வாழுமிடம் | Jalan Batu Buruk, கம்போங் பத்து பூரோக், 20400 கோலா திராங்கானு, திராங்கானு |
அலுவலகம் | Tingkat 16, விசுமா தாருல் இமான், 20502 கோலா திராங்கானு, திராங்கானு |
நியமிப்பவர் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் திராங்கானு சுல்தான் |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவானது, ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது |
முதலாவதாக பதவியேற்றவர் | நிகா முகமது யூசுப் (Ngah Muhamad Yusof) |
உருவாக்கம் | 21 ஏப்ரல் 1925; 99 ஆண்டுகள் முன்னர் (1925-04-21) |
இணையதளம் | pmb |
மூடு
தற்போது திராங்கானு மந்திரி பெசார் பதவியில் உள்ளவர் அகமத் சம்சூரி மொக்தார் (Ahmad Samsuri Mokhtar). இவர் 10 மே 2018 முதல் திராங்கானு மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.