துகாங்கிடே
From Wikipedia, the free encyclopedia
துகாங்கிடே (Dugongidae) என்பது சைரேனியா வரிசையில் உள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் எஞ்சியிருக்கும் ஒரு சிற்றினம், ஆவுளியா (துகோங் துகோன்) ஆகும். சமீபத்தில் அழிந்துபோன சிற்றினமாக, இசுடெல்லர்சு கடல் பசு (கைட்ரோடாமலிசு ஜிகாசு) மற்றும் புதை படிவ பதிவுகளிலிருந்து அறியப்பட்ட பல அழிந்துபோன சிற்றினங்களும் இக்குடும்பத்திலிருந்தன.
துகாங்கிடே புதைப்படிவ காலம்:பிந்தைய ஈயோசீன்-கோலோசீன் | |
---|---|
ஆவுளியா மார்சா ஆலமில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | சைரென்யா |
குடும்பம்: | துகாங்கிடே |
பேரினம் | |
துகாங் |
துகாங்கிடேயின் உடல் எடையானது இளம் உயிரிகள் என்றால் 217 முதல் 307 கிலோ வரையும், வயது வந்த இளம் உயிரி என்றால் 334 முதல் 424 வரையும் நன்கு வளர்ந்த உயிரிகள் என்றால் 435 முதல் 568.5 வரையும் காணப்படும். இதனுடைய உடலின் வெப்பநிலை 24 முதல் 34.2 °Cவரை மாறுபடும். இதயத் துடிப்பு அளவீடுகள் 40 முதல் 96 பிபிஎம் வரை இருக்கும். இவை தனிப்பட்ட துகாங்குகளுக்கு இடையில் மாறுபடும். தண்ணீருக்கு வெளியே இதன் சுவாச விகிதம் 1 முதல் 33 வரை இருக்கும்.[1]