நியூ ஹேவென், கனெடிகட்
From Wikipedia, the free encyclopedia
நியூ ஏவன் (New Haven, நியூ ஹேவென்) ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது நீள் தீவு இடைக்கடலின் வடக்கு கரையோரத்திலுள்ள துறைமுக நகரம். 2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 134,023.[2] கனெக்டிகட் மாநிலத்தில் பிரிட்ஜ்போர்ட், இசுடாம்போர்டு நகரங்களை அடுத்து மூன்றாவது பெரிய நகரமாக விளங்குகின்றது.
நியூ ஏவன், கனெக்டிகட் | |
---|---|
மாநகரம் | |
நியூ ஏவன் நகரம் | |
மேலிருந்து, இடமிருந்து வலது : மையநகரம், கிழக்கு பாறைப் பூங்கா, நியூ ஏவன் கிரீன், அப்பர் ஸ்டேட் ஸ்ட்ரீட் இஸ்டாரிக் டிஸ்ட்ரிக்ட், ஐந்து மைல் பாய்ன்ட் கலங்கரைவிளக்கு, ஆர்க்னசு கோபுரம்,யேல் பல்கலைக்கழகத்தில் கனெக்டிகட் கூடம் | |
அடைபெயர்(கள்): எல்ம் நகரம் | |
நியூ ஏவன் நகரின் நிகழ்ஊடக நிலப்படம் | |
ஆள்கூறுகள்: 41°18′36″N 72°55′25″W | |
Country | ஐக்கிய அமெரிக்கா |
கவுன்ட்டி | நியூ ஏவன் |
பெருநகர பகுதி | பெரும் நியூ ஏவன் |
குடியமர்வு (ஊர்) | ஏப்ரல் 3, 1638 |
நிறுவப்பட்டது (நகரம்) | 1784 |
ஒருங்கிணைப்பு | 1895 |
பெயர்ச்சூட்டு | ஓர் புதிய ஏவன், துறைமுகம் என்ற பொருளில் |
அரசு | |
• வகை | மேயர்-நகரவை |
• நகரத்தந்தை | ஜஸ்டின் எலிக்கர் (D) |
பரப்பளவு[1] | |
• மாநகரம் | 20.13 sq mi (52.15 km2) |
• நிலம் | 18.69 sq mi (48.41 km2) |
• நீர் | 1.44 sq mi (3.74 km2) |
ஏற்றம் | 59 ft (18 m) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மாநகரம் | 1,29,779 |
• Estimate (2019)[1] | 1,30,250 |
• அடர்த்தி | 6,968.97/sq mi (2,690.72/km2) |
• பெருநகர் | 8,62,477 |
மெட்ரோ என்பது நியூ ஏவன் கவுன்ட்டியைக் குறிக்கும் | |
நேர வலயம் | கிழக்கு (ஒசநே−5) |
• கோடை (பசேநே) | கிழக்கு (ஒசநே−4) |
சிப் குறியீடுகள் | 06501–06540 |
தொலைபேசி குறியீடு | 203/475 |
FIPS code | 09-52000 |
GNIS feature ID | 0209231 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | |
இணையதளம் | www |
நியூ ஏவன் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டு உருவான முதல் நகரமாகும்.[3][4][5] 1638இல் ஆங்கில சீர்திருத்தவாதிகள் நிறுவி ஓராண்டிற்குப் பின்னர் எட்டு சாலைகள் நான்குக்கு நான்கு வலைவடிவமாக திட்டமிடப்பட்டன; இது தற்போது "ஒன்பது சதுரத் திட்டம்" என அறியப்படுகின்றது.[6] நடுவில் அமைந்த பொதுச் சதுரத்தில் நியூ ஏவன் கிரீன் என்ற பூங்கா உள்ளது; இது நியூ ஏவனின் மையநகரப்பகுதியில் 16-ஏக்கர் (6 ha) பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா தற்போது தேசிய வரலாற்று அடையாளமாகவும், "ஒன்பது சதுரத் திட்டம்" தேசிய திட்டமிடல் அடையாளமாகவும் ஏற்கப்பட்டுள்ளன.[7][8]
நியூ ஏவன்யேல் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம். நகரத்தின் பெருமளவில் வரி கட்டுபவராகவும் முதன்மை வேலை வாய்ப்பு நல்குபவராகவும் [9] விளங்கும் யேல்பல்கலைக்கழகம்,நியூ ஏவன் நகரத்தின் பொருளாதாரத்தின் ஆணிவேராக உள்ளது.
இந்த நகரம் 1701 முதல் 1873 வரை கனெக்டிகட் மாநிலத்தின் இணை தலைநகரமாக விளங்கியது; 1873க்குப் பின்னரே மாநிலத்தின் மையத்தில் அமைந்திருந்த ஹார்ட்பர்டிற்கு தலைநகரம் மாறியது. இங்குள்ள கலைக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், இசையரங்கங்கள் காரணமாக நியூ ஏவன் கனெக்டிகட்டின் பண்பாட்டுத் தலைநகரம் என அறியப்படுகின்றது.[10] அமெரிக்காவின் முதல் மரம் நடுவிழா இங்குதான் நடைபெற்றது; எல்ம் என்ற வகை மரங்கள் அதிகமாக நடப்பட்டு இந்த நகரத்திற்கு "எல்ம் நகரம்" என்ற சிறப்புப் பெயரை பெற்றுத் தந்தது.[11]