பக்தபூர்
From Wikipedia, the free encyclopedia
பக்தபூர் (Bhaktapur) (நேபாளி: भक्तपुर Listenⓘ ), (மாற்று பெயர்கள்: குவாபா தேசம் ( ख्वप देस) மற்றும் பாத்கவுன்), இதனை பக்தர்களின் நகரம் என்றும் அழைப்பர். இந்நகரம் காத்மாண்டு சமவெளிவின் கிழக்கில், நேபாளத்தின் தேசியத் தலைநகரான காட்மாண்டிலிருந்து எட்டு மைல் தொலைவில், நேபாள மாநில எண் 3ல் உள்ள பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது.
பக்தபூர்
भक्तपुर குவாபா தேசம் மற்றும் பாத்கவுன் | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 27°40′20″N 85°25′40″E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | நேபாள மாநில எண் 3 |
மாவட்டம் | பக்தபூர் |
அரசு | |
• தலைவர் | சுனில் பிரஜாபதி |
• துணைத் தலைவர் | ரஜனி ஜோஷி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.89 km2 (2.66 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 81,728 |
• அடர்த்தி | 12,000/km2 (31,000/sq mi) |
• சமயங்கள் | இந்து சமயம் பௌத்தம் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாளச் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 44800 |
Area code | 01 |
இணையதளம் | http://bhaktapurmun.gov.np |
மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின், பாக்மதி மண்டலத்தில் அமைந்த எட்டு மாவட்டங்களில் ஒன்றான பக்தபூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக பக்தபூர் நகரம் உள்ளது. பத்து நகராட்சி மன்ற உறுப்பினர்கள் கொண்ட நகராட்சிக் குழு, பக்தபூர் நகராட்சியை நிர்வகிக்கிறது.
தொன்மையான பக்தபூர் நகரத்தில், நேபாளத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில், இரண்டு பக்தபூரில் உள்ளது. அவைகள்: பக்தபூர் நகர சதுக்கம் மற்றும் சங்கு நாராயணன் கோயில் ஆகும்.
இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 2500 அடி உயரத்தில் உள்ளதால், தட்ப-வெப்ப நிலை அதிக குளிரும், வெப்பமும் இன்றி சீராக உள்ளது.