பயனர் பேச்சு:Shrikarsan
From Wikipedia, the free encyclopedia
லோ.ஸ்ரீகர்சன் | |||||||
முகப்பு | உரையாடல் | தொடங்கிய கட்டுரைகள் | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | |||
பதிவேற்றிய படிமங்கள் | உருவாக்கிய வார்ப்புருக்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி | மின்னஞ்சல் |
முன்னைய உரையாடல்கள்
வாருங்கள்!வாருங்கள், Shrikarsan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:16, 23 பெப்ரவரி 2013 (UTC) விக்கித்திட்டம் சைவத்தில் பங்கு கொள்ள அழைப்புவணக்கம், Shrikarsan! தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன். இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:37, 7 அக்டோபர் 2013 (UTC) கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்கட்டுரைப் போட்டியில் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. ஆனால் கட்டுரைகள் இப்பட்டியலில் இருந்து இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 14 அக்டோபர் 2013 (UTC) பதக்கம்
மாணவர்
பதிப்புரிமை மீறல்தேவையான படங்கள் இங்குள்ளன. பதிப்புரிமை உள்ள படங்களை பதிவேற்றாதீர்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:21, 18 அக்டோபர் 2013 (UTC) பதக்கம்
வணக்கம்தங்களைப் பற்றி என் பாடசாலையில் கேட்டறிந்தேன். மகிழ்ச்சி, தங்கள் தொடர்பு விபரம் பற்றி எனக்கு ஒருமின்னஞ்சல் அனுப்ப முடியுமா?, இங்கே
தங்களை பற்றிய விவரங்களில் தங்கள் புகைப்படத்தை இணைக்க பதிவேற்றிவிட்டு சரியான தலைப்பை இடவும்.முத்துராமன் (பேச்சு) 15:46, 12 நவம்பர் 2013 (UTC) பதக்கம்
கட்டுரைப் போட்டி
வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள் சிறிகர்ஷன்.கழுதவளைப் பிள்ளையார் பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்..--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:50, 30 அக்டோபர் 2013 (UTC) என் எழுத்துப்பணி மேலும் தொடரும். உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பே என்னைப் போன்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கின்றது.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:31, 2 நவம்பர் 2013 (UTC)குதிரை உந்தும் உந்தலிலேயே தெரிகிறது, தங்களுக்கு எவ்வளவு அவசரம் என்று.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:09, 7 நவம்பர் 2013 (UTC) ஸ்ரீகர்சன் வாழ்த்துக்கள். இந்த சிறிய வயதில் மிகச்சீரிய பனி. வாழ்க வளர்க. நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:21, 10 திசம்பர் 2013 (UTC) நன்றி சிவகார்த்திகேயன் அவர்களே -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 11 திசம்பர் 2013 (UTC) மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Shrikarsan! நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:15, 2 நவம்பர் 2013 (UTC)
வணக்கம், Shrikarsan. உங்களுக்கான புதிய தகவல்கள்
Surya Prakash.S.A. இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம். கட்டுரைப் போட்டி - அக்டோபர்போட்டி விதிகளில் ஒன்றான இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும் என்பதை நீங்கள் கருத்திற் கொள்ளவில்லை. எனவே நீங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், கட்டுரைகள் போட்டிக்குரியவை அல்ல. அடுத்த முறை இதைக் கவனத்திற் கொண்டு போட்டியில் ஈடுபட்டு வெற்றியீட்டுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:35, 3 நவம்பர் 2013 (UTC) தென்காசியார் முதலிலேயே கூறியிருந்தார் அறியாமல் செய்த தவறுக்கு வருந்துகின்றேன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:05, 3 நவம்பர் 2013 (UTC)
நிச்சயமாக, முதலில் பரீட்சை முடியட்டும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:18, 3 நவம்பர் 2013 (UTC)
இனி எல்லாம் உலக அழிவுதான் வரப்போதய்யா, தளபதியின் லீலைகள் தங்களுக்குத் தெரியாதா? குதிரை பாயும் பாய்ச்சலிலேயே தெரியுமல்லவா!--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:06, 7 நவம்பர் 2013 (UTC)
ஆமாம்! ஆமாம்! இப்பொழுதே மூன்று என்றால் மூன்று ஆறாகி ஆறு ஒன்பதாகி இறுதியில் எங்கு போய்த்தான் முடிகிறதோ?........................ அப்பப்பா! ஸ்ரீகர்சன் பையன் இலங்கை மேல் விழுந்தால் தமிழ் நாடும் சரி, இலங்கையும் சரி. இப்படிக்கு (அணுகுண்டின் இளவல்)--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:06, 12 நவம்பர் 2013 (UTC)
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:04, 26 நவம்பர் 2013 (UTC) தென்காசியாரே! இரகசியத்தை வெளியில் போட்டு உடைத்துவிடாதீர்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:07, 26 நவம்பர் 2013 (UTC)
ஸ்ரீ கர்சா நடுவுல என்னப்பா பண்ற? ஆங்கிலத்தில் எழுதியது நீ தானே? நடுவுல கொஞ்சம் பைட்ட காணாம ஆக்கிட்டியேபா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:10, 27 நவம்பர் 2013 (UTC) கவலப் படாதிங்கக்கா இப்ப உடனேயே தமிழ்ல மொழிபெயர்த்துடுரன் நீங்கதான் தொகுத்ததெண்டா கையே வச்சிருக்க மாட்டேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:14, 27 நவம்பர் 2013 (UTC) அத நான் நீக்கிட்டேன் பா...:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:15, 27 நவம்பர் 2013 (UTC) ஏங்கா ஏன் சரி மேலும் தொகுத்தாப் போச்சு-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 27 நவம்பர் 2013 (UTC) bro அடுத்தவங்க ஆட்டோக்கு பூஜை பண்றது ரொம்ப தப்பு bro.நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:29, 27 நவம்பர் 2013 (UTC) sis அது ஆட்டோ இல்ல கடுங்கரி sis-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:31, 27 நவம்பர் 2013 (UTC) என்னனாலும் தப்பு bro.சப்பா............முடியல :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:34, 27 நவம்பர் 2013 (UTC) உங்களால் முடியாததா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:38, 27 நவம்பர் 2013 (UTC) நான் நல்லா பண்றனோ இல்லையோ, நீ நல்ல பண்ற.............நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:43, 27 நவம்பர் 2013 (UTC) கட்டுரைப் போட்டியில் முன்பதிவு எல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத் தான். யார் முன்பதிவு செய்ததையும் யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:05, 27 நவம்பர் 2013 (UTC) தென்காசியாரே தங்களின் திருகுதாளங்கள் நானும் அறிவேன். என் குருவே நீங்க தானே! அதுக்காக நீங்கவேற உசுப்பேத்தி விடுறதா?-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:10, 27 நவம்பர் 2013 (UTC) நாங்கள் இருவருமே அந்தக் கட்டுரையை முன்பதிவு செய்யவில்லை தென்காசியாரே.இங்கு பாருங்கள் புரியும்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:16, 27 நவம்பர் 2013 (UTC) ஏன் ஸ்ரீ கர்சா ஏன்? நான் எழுதிக்கிட்டு இருக்குற கட்டுரையா பாத்து 15000 பைட்டுகளா ஆக்குற? அளவே இல்லாம போகுதே ஆண்டவா.......நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:44, 27 நவம்பர் 2013 (UTC) பதிலுரைக்கவும்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 27 நவம்பர் 2013 (UTC) இது தொடர்பான உரையாடல்கள் கட்டுரைப் போட்டி ஆரம்பிக்கும் போதே நிறைய பக்கங்களில் நடந்தது. மூன்றாவது மாதமே புயலடித்ததால் புயலுக்கு அது தெரியாமல் போயிருக்கலாம். இருந்தாலும் தளபதியாரின் பக்கம் வந்து இப்படி அவரை பயமுறுத்தினால் அவர் என்ன செய்வார் தெரியுமா? கடற்கோளை பாண்டியன் வேல் விட்டு அடக்கிய கதையை நினைவில் கொள்ளவும். தளபதியாருக்கு கடலே காக்கா புடிக்கிற மாதிரி. புயலெல்லாம் தூசி போல் ஊதிவிட்டுப் போய்விடுவார். நாராயண....நாராயண....--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:53, 27 நவம்பர் 2013 (UTC) யார் யார் மேல் பொறாமையும்,கோபமும் கொண்டுள்ளார்கள் தென்காசியாரே? நான் ஒன்றும் என்னை புயல் என்று கூறிக்கொள்ளவில்லை.நான் வெற்றி பெற முயர்ச்சிக்கிறேன் அவ்வளவு தான்.நான் போட்டியை ஆரோக்கியமாகவே கையாளுகிறேன்.யாருடைய வளர்ச்சியையும் நான் தடுக்கவில்லை, அது போன்ற எண்ணமும் எனக்கு இல்லை. நான் நியாயமே கேட்டேன்.நான் விரிவாக்கிக் கொண்டிருப்பதை ஏன் விரிவாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:42, 27 நவம்பர் 2013 (UTC) நான் யாரும் யார் மேல் பொறாமையும் கோபமும் கொண்டதாகக் கூறவில்லை. ஸ்ரீகர்சன், நான், ஆதவன், முத்துராமன், நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் எப்படி உரையாடினோமோ அப்படித்தான் நானும் உரையாடினேன். நீங்கள் கட்டுரை சிக்கல் பற்றிய எண்ணத்தில் இருந்ததால் உங்களுக்கு உரையாடலின் நோக்கம் வேறு மாதிரி தெரிந்திருக்கிறது. தற்போதைக்கு கட்டுரைப் போட்டியில் நீங்கள் கவனம் செலுத்தவும். என் உரையாடல் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 27 நவம்பர் 2013 (UTC) ஏங்க இப்படி விசயத்த சீரியஸா ஆக்குரீங்க.....Relax please..நந்தினி அவர்களே ஸ்ரீகர்சன் போட்டியில் வெல்ல வேண்டும் என்றோ அல்லது அறியாமலோ செய்திருக்கலாம்..வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்...ஸ்ரீகர்சா நீயும் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உரையாடலாக எடுத்துக்கொள்ளவும்..முத்துராமன் (பேச்சு) 15:35, 27 நவம்பர் 2013 (UTC)
தீர்வுகள்ஸ்ரீ கர்சா, முதல் தீர்வுக்கே என்ன பதிலுரைப்பது என்று எனக்குத் தெரியவில்லை , இதில் இரண்டாவது தீர்வு வேறா?....... நீ புரிந்து கொண்டதே எனக்கு போதும்.என் பேச்சு பக்கத்தில் இருப்பனவற்றை நீயே பதிவேற்றிவிடு.ஏனெனில் அது உன் உழைப்பு.அவ்விருக்கட்டுரைகளும்,நான் தொக்க ஆரம்பித்தவை ஆனால் நீ எழுதியது உன் உழைப்பு தான்.அவ்விரு கட்டுரைகளின் முடிவும் நடுவர்கள் உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.அன்புடன் அக்கா :).நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:41, 30 நவம்பர் 2013 (UTC) அக்கா நான் செய்த தவறைப் பொறுத்தருளியமைக்கு நன்றி. நீங்கள் தான் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறுவீர்கள் அதற்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்கள். தாங்கள் கூடுதலாகக் கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பதற்காக நான் மேலும் போட்டியில் பங்கு பற்றுகின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:24, 30 நவம்பர் 2013 (UTC)
தம்பி நீ நீக்க நீக்க நான் போட்டுகிட்டே இருப்பேன்.வெற்றி பெற்று விட்டாய் தம்பி. வாழ்த்துக்கள்.:) ...... தென்காசியாரே ஸ்ரீகர்சனின் பங்களிப்பை பார்த்து முடிவை அறிவியுங்கள்.அவர் முடிவுகளில் இட தயக்கம் காட்டுகிறார் போல தெரிகிறது.எப்படியோ விக்கியில் அணுகுண்டும் போட்டாச்சு :). என் தமயன் உனக்கு விக்கியின் மாக்னஸ் கார்ல்சன் என்று பெயர் சூட்டியுள்ளான். அவரும் உனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் தம்பி.:).........--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:09, 30 நவம்பர் 2013 (UTC)
நீ நீக்கம் செய்தாலும் நிருவாகிகள் பார்த்திருப்பர் ,,, விளையாட்டு வேண்டாம் தம்பி, சிறு பிள்ளை தனமாக இருக்கும். :) // It's all in the game. Welcome to the show :) //--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:15, 30 நவம்பர் 2013 (UTC) அக்கா அப்படியே ஆகட்டும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:29, 30 நவம்பர் 2013 (UTC)
அதான் நான் முன்னவே முகநூலில் சொன்னேனே நிஷா-->மாலா-->நந்தினி-->ஹெலன். இருந்தாலும் வேல்விட்டு கடல்கோள் அடக்கிய கதையை மறக்க முடியவில்லை. நாராயண நாராயண...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 30 நவம்பர் 2013 (UTC) படலங்களில் பட்டையைக் கிளப்பும் தென்காசியாரே! மன்னிக்கவும் நாரதரே!!! திருப்பவும் வந்திட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ் வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. முடியல.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:20, 30 நவம்பர் 2013 (UTC) என்ன தளபதியாரே கட்டுரைக்கு 20 மேல் ஒரே விதிமீறலா இருக்கே. சீக்கிரமா சரி பண்ணுங்க. யொஹான்னெஸ் வெர்மீர் இருமுனையப் பிறழ்வு மனித இரையகக் குடற்பாதை உயிரியல் வகைப்பாடு ஒளியணு மேலுள்ளவற்றை சரி செய்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 30 நவம்பர் 2013 (UTC)
குறைந்த காற்றழுத்தம் என்று தான் வானிலை அறிக்கையில் சொல்கின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:32, 8 திசம்பர் 2013 (UTC) தளபதியாரின் படம் தேவைமுதல் பக்கத்தில் போட உன் படம் வேண்டுமப்பனே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:26, 7 திசம்பர் 2013 (UTC) தளபதியாரின் படம்தானே இங்கே உள்ளது சற்று இளையதாக இருந்தால் பிரச்சனையொன்றும் இல்லையே!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:37, 8 திசம்பர் 2013 (UTC)
இளவேந்தே இதோ இங்கே......
தங்களுடைய பெறுபேற்றை உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டுவிடுங்கள். அறிய மிகவும் ஆவல்!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:59, 8 திசம்பர் 2013 (UTC)
முன்னாள் வெற்றியாளருக்கும் இந்நாள் வெற்றியாளருக்கும் என் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள் ஸ்ரீகர்சன். மேன்மேலும் சிறப்பான பங்களிப்பும் வெற்றியும் பெற வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 10 திசம்பர் 2013 (UTC) சஞ்சீவி சிவகுமார், சகோதரன் ஜெகதீஸ்வரன், பார்வதிஸ்ரீ மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2013 (UTC) கட்டுரைப் போட்டிக்கான பதக்கம்
வாழ்த்துக்கள் சகோதரா--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:01, 14 திசம்பர் 2013 (UTC)
அனைவருக்கும் என் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:25, 22 திசம்பர் 2013 (UTC) களைப்புஎனது 56 வது வயதில் 56 கட்டுரைகளை எழுதுவது சிவனின் ஆசி!!. க.ளை.ப்..பு?? எம் தாய்மொழி தமிழில் கலைஞானம் அனைத்தும் குவித்த பிறகு பார்க்கலாம்...அப்போது கிடைத்தால் ஓய்வை. நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 08:46, 15 திசம்பர் 2013 (UTC)
விக்கித் திட்டம் வானியல் அழைப்புவணக்கம், Shrikarsan!
வானியல்த் துறையை வளர்த்தெடுக்க விக்கியில் பணியாற்றுபவர்கள் மிக மிக அரிது, அப்படி இருகையில் தாங்கள் வானியல் துறை சார்ந்த கட்டுரைகளான டிரைட்டன், ஐரோப்பா போன்ற துணைக்கோள்களின் கட்டுரைக்களை மேம்படுத்துவதில் பங்காற்றி உள்ளீர்கள். இப்படிப்பட்ட அரும்பணியாற்றும் நீங்களும் ஏன்? விக்கித்திட்டம் வானியலில் பங்குகொண்டு அத்துறையை வளர்த்தெடுக்க தங்களை அன்புடன் அழைக்கும் அன்பு இளவல் தம்பி கீரன்!... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 22 திசம்பர் 2013 (UTC) இணைந்து கொண்டமைக்கு நன்றி சகோதரா! இணைபவர்கள் அனைவருமே பள்ளி மாணவர்களாக உள்ளார்கள்...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:35, 22 திசம்பர் 2013 (UTC)
பதிப்புரிமை மீறல்வணக்கம், Shrikarsan! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள். இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம். புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
பதக்கம்
விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரா?--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:01, 25 திசம்பர் 2013 (UTC) விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:38, 25 திசம்பர் 2013 (UTC) நன்றி -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:49, 25 திசம்பர் 2013 (UTC) பதக்கம்
பதக்கம் (உருவாக்கம்) தாங்கள் சிறந்த பதக்க உருவாக்குனர் என்பர்து அனைவரும் அறிந்த விடயமே, விக்கித்திட்டம் சைவத்தில் சைவசமயத்திற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கியது போல் விக்கித்திட்டம் வானியலுக்காக வானியலிற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கினால் நன்றாய் இருக்கும். (உறுப்பினர் உருவாக்கினால் தானே அது உறுப்பாக அமையும்.) -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:54, 27 திசம்பர் 2013 (UTC)
பாராட்டுக்கு மிக்க நன்றிநண்பர் ஸ்ரீகர்சன் அவர்களுக்கு உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இனி எடுக்கும் தலைப்புகள் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்து மட்டும் எடுக்கிறேன் . இனி வரு காலங்களிலும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கும் ஒரு புதிய பயனர் புதுவைபிரபு 10:22, 29 திசம்பர் 2013 (UTC) நானும் அக்டோபர் மாதத்தில் போட்டி வித்திகளைச் சரியாகப் படிக்காமல் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இல்லாத 15 கட்டுரைகளை விரிவாக்கினேன். அம்மாதம் நந்தினி அக்கா 4 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றார். பின்னர் நவம்பர் மாதம் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்த 29 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றேன். முயற்சியைத் தொடருங்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கலாம்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 23:38, 29 திசம்பர் 2013 (UTC) விருப்பம் என்னுடய வாழ்த்துக்களும்:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:37, 31 திசம்பர் 2013 (UTC) வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க பிரபு அவர்கட்கு என்னுனுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:08, 31 திசம்பர் 2013 (UTC) புள்ளிபக்கவழி நெறிப்படுத்தல் பட்டியல்களில் ஒவ்வொரு வரி / தலைப்பின் இறுதியிலும் புள்ளி வைக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படியே வைத்தாலும் தானியங்கியாக வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து தொகுக்கும் முன் சற்று பொறுக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:15, 31 திசம்பர் 2013 (UTC) அரைவாசிப் பக்கவழி நெறிப்படுத்தல் பட்டியல்களில் புள்ளியிட்டுவிட்டேன். தவறு இருப்பின் பொறுத்தருளுக.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:23, 31 திசம்பர் 2013 (UTC)
புரிதலுக்கு நன்றி. அலகு, மங்காத்தா போன்ற பக்கங்களில் ஒரு பட்டியல் வரிக்கு ஒரு தலைப்பு மட்டும் உள்ள போது புள்ளி இடுவது எழிலாகவும் இல்லை, இலக்கணப்படி தேவைப்படுவதாகவும் தெரியவில்லை. இரு சொற்றொடர்கள் இருந்தால் இடையில் புள்ளி வைக்கலாம். அல்லது, ஒரே சொற்றொடரில் நிறைய பட்டியல் உருப்படிகள் காற்புள்ளி / அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்டிருந்தால் முற்றுப் புள்ளி வைக்கலாம். இதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர வேண்டும். அல்லது, ஏற்கனவே புள்ளியிட்ட பக்கங்களை மீள்விக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 12:49, 1 சனவரி 2014 (UTC) ஆலோசனைகளுக்கு நன்றிகள் மீள்வித்துவிடுகின்றேன். உங்கள் ஆலோசனைகளை நாடி நிற்கும் ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC) {{தொகுக்கப்படுகிறது}}அண்ணா, தயவு செய்து {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளைத் தொகுக்க வேண்டாம். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:13, 1 சனவரி 2014 (UTC) இனித் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்கின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC) கல்விக் கலைஞன்சீர்கர்சன் விக்கியில் கட்டுரைகளுக்குத் தொடுப்புத் தந்திருப்பதைப் பார்த்தால் படிக்கவேண்டிய முறைப்படிப் படிக்கிறார் என்பது தெளிவாகிறது. எனவே இவரைக் கல்விக் கலைஞன் எனப் போற்றி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:15, 1 சனவரி 2014 (UTC)
விக்கிப் பெரியார் பொதுவர் அவர்கட்கும், விக்கிக் கடல் கனக்ஸ் அவர்கட்கும், விக்கியில் அசத்தும் ஆதவனுக்கும் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC) நன்றிகட்டுரையில் துணை புரிவதற்க்கு நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 11:16, 2 சனவரி 2014 (UTC) நன்றி முடிந்தவரை கட்டுரைகளை வளர்த்தெடுக்கத் துணை புரிவேன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:40, 2 சனவரி 2014 (UTC) கட்டுரைப் போட்டிக்கான பதக்கம்
விருப்பம் ஒரு கல்லிலை ரண்டு மாங்காய் அடிக்கிறதே சிலபேருக்கு வேலையாப்போச்சு வாழ்க!...-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:41, 6 சனவரி 2014 (UTC) // சிலபேருக்கு வேலையாப்போச்சு வாழ்க!// ஆமாப்பா. ஆமா. எப்படியோ நான் சொல்லிக்கொடுத்த பிரேக்கிங் பாயின்டை பயன்படுத்தி தமிழ்க்குரிசிலை வென்றுவிட்டான் யாழ் தளபதி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:10, 6 சனவரி 2014 (UTC) அன்டன், தமிழ்க்குரிசில், பார்வதிஸ்ரீ, யாழ்ஸ்ரீ, அப்புறம் நம்ம தென்காசி எல்லோருக்கும் நன்றி.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:50, 7 சனவரி 2014 (UTC) நாமெல்லாம் ஒரே country நமக்குள்ளை எதுக்குப்பா நன்றி... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:12, 8 சனவரி 2014 (UTC)
நானெல்லாம் சுனாமிலேயே சுவுமிங்கடிக்கிற வுங்கப்பு! இதெல்லாம் நமக்கு யுயுபி!... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:36, 8 சனவரி 2014 (UTC)
அப்பிடியா அதையும் நான் நம்பீட்டன்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:54, 8 சனவரி 2014 (UTC) ஆசியான்ஆசியான் பற்றிய கட்டுரையை மேம்படுத்தியமைக்கு நன்றி. நீங்கள் எழுதிய ஒரு பந்தியை மட்டும் விக்கி நடைமுறைக்கேற்பத் திருத்தியிருக்கிறேன். பொதுவாக கட்டுரையின் ஆரம்ப வரிகளில் கட்டுரைத் தலைப்பை மட்டுமே தடித்த எழுத்தாகத் தரலாம். ஏனைய இடங்களில் அவ்வாறு தேவையில்லை. ஒரே சொல்லுக்கு ஒரே கட்டுரையில் பல முறை உள்ளிணைப்புகள் தருவதைத் தவிருங்கள். மிக நீண்ட கட்டுரை என்றால் இரண்டு மூன்று இடங்களில் தரலாம். எனது திருத்தத்தைப் பாருங்கள். வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:33, 10 சனவரி 2014 (UTC) நன்றி கனக்ஸ் அவர்களே உங்கள் ஆலோசனைகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கும் ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:33, 11 சனவரி 2014 (UTC) நன்றி கனக்ஸ் அவர்களே!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:31, 12 சனவரி 2014 (UTC) விக்கித்திட்டம் சென்னை அழைப்புவார்ப்புரு:விக்கித் திட்டம் சென்னை/பயனர் அழைப்பு வெற்றியாளனுக்கு வாழ்த்துக்கள்தொடர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் ஸ்ரீகர்சனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். - ரத்தின சபாபதி (பேச்சு) 11:11, 4 பிப்ரவரி 2014 (IST) விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரா! தங்கள் பணி மேலும் தொடர்க......--யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:06, 4 பெப்ரவரி 2014 (UTC) நன்றி ரத்தின சபாபதி அவர்களே, நன்றி தம்பி-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:19, 4 பெப்ரவரி 2014 (UTC) வாழ்த்துக்கு நன்றிகள்--G.Kiruthikan (பேச்சு) 17:22, 5 பெப்ரவரி 2014 (UTC) கட்டுரைப் போட்டி - சனவரி 2014
விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:28, 7 பெப்ரவரி 2014 (UTC)
மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்கருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:14, 9 பெப்ரவரி 2014 (UTC)
வணக்கம், Shrikarsan. உங்களுக்கான புதிய தகவல்கள்
விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
அவர் இப்ப பிசி--aho;- பேச்சு 07:37, 13 பெப்ரவரி 2014 (UTC)
புதிய கருவிகளுக்கு நன்றிShrikarsan! உங்கள் புதிய கருவிகளுக்கு நன்றி. இந்தச் சிறிய வயதில் உங்களதும் உங்கள் நண்பர்களதும் விக்கிப் பங்களிப்பு வியக்க வைக்கின்றது. விருப்பம். வேறொன்றுமில்லை. உங்கள் கருவியைச் சோதித்துப் பார்த்தேன். :)--கலை (பேச்சு) 09:48, 17 பெப்ரவரி 2014 (UTC) நன்றி கலையரசி அவர்களே மேலும் பல கருவிகளை உருவாக்கி விட்டேன் விரைவில் வெளியிடுகின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:40, 17 பெப்ரவரி 2014 (UTC) நன்றிநன்றி ஸ்ரீகர்சன். உங்களைப் போன்ற இளைஞர்களின், மாணவர்களின் ஈடுபாடும், பல்வகைப் பங்களிப்புகளும் நம்பிக்கையை விதைக்கின்ற வீரியமிகு வித்துக்கள். வங்கியாளன் என்ற முறையிலே என் பங்களிப்பைத் தொடர விழைகின்றேன்.−முன்நிற்கும் கருத்து சேந்தன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. கட்டுரைப் போட்டி - பெப்ருவரி 2014
சிவப்பு இணைப்புகள்சிரில்லிக் எழுத்துக்கள் கட்டுரையில் அனாவசியமாக சிவப்பு இணைப்புகள் நிறைய உள்ளன. அவற்றை நீக்குங்கள்.--Kanags \உரையாடுக 08:25, 25 மார்ச் 2014 (UTC) சரி செய்கின்றேன்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:46, 25 மார்ச் 2014 (UTC) கையெழுத்துகையெழுத்து எப்படி அமைய வேண்டும் என்பதற்கேற்ப படங்கள் தவிர்த்து அமையுங்கள். --AntonTalk 03:42, 25 மார்ச் 2014 (UTC) நன்றி மாற்றிவிட்டேன்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:14, 25 மார்ச் 2014 (UTC) முன்பதிவுஅண்ணா! தாங்கள் நான் முன்பதிவில் இட்டிருந்த கட்டுரைகளை விரிவக்கியுள்ளீர்கள். துருக்கிய மொழி, இலத்தீன் போன்ற கட்டுரைகள்-- நி.மாதவன் ( பேச்சு ) 07:40, 27 மார்ச் 2014 (UTC) நன்றி சிறீகர்சன், தாயக் கட்டை பகுப்பை சிறப்பாக முடித்ததற்கு.... புதிய கட்டுரைகள் தொடங்க வாழ்த்துக்கள்18:31, 28 மார்ச் 2014 (UTC)சரவணன் பெரியசாமி விருப்பம் நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:07, 29 மார்ச் 2014 (UTC) அண்ணா! தாங்கள் திரும்பவும் நான் முன்பதிவில் இட்டிருந்த கட்டுரைகளை விரிவக்கியுள்ளீர்கள். வட்டாரமொழி வழக்குகள் கட்டுரை. முன்பதிவைப் பார்த்துவிட்டு விரிவாக்குங்கள் ப்ளீஸ். உங்களால் எனக்கு மூன்று கட்டுரை லாஸ்ட் ஆயிடிச்சு. போன முறை எதியோப்பியா கட்டுரையையும் விரிவாக்கியுள்ளீர்கள்.-- நி.மாதவன் ( பேச்சு ) 12:58, 30 மார்ச் 2014 (UTC) முன்பதிவில் இட்ட கட்டுரையை விரிவாக்கக் கூடாது என எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என முன்னர் தென்காசியார் குறிப்பிட்டிருக்கின்றார்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:49, 31 மார்ச் 2014 (UTC)
//கட்டுரைப் போட்டியில் முன்பதிவு எல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத் தான். யார் முன்பதிவு செய்ததையும் யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்.// தென்காசியார் கூறியது. இவ்வாறு முன்பும் நிகழ்ந்துள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:22, 31 மார்ச் 2014 (UTC) ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டும் போது கவனிக்கத் தக்கவை
இல்லாவிடின் நிறைய உடைந்த இணைப்புகளையும், சிகப்பு இணைப்புக்களையும் கொண்டு கட்டுரை அழகாக இருக்காது. உங்கள் தொகுப்புகள் மீள் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். --Natkeeran (பேச்சு) 16:07, 31 மார்ச் 2014 (UTC) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:23, 1 ஏப்ரல் 2014 (UTC) மொழிபெயர்ப்புஅண்ணா தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மொழிபெயர்க்கப்படாத கட்டுரைகள் முதர்ப்பக்கத்தில் இடப்படுவது இல்லை. எனினும் வார்ப்புரு உருவா க்க்கப்பைட்டுள்ளதால் நான் அக்கட்டுரைக்கு மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடவில்லை. தயவு செய்து மொழிபெயர்க்கப்பைடாது ஆங்கிலத்தில் உள்ளவற்றை விரைந்து தமிழ்ப்படுத்தவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:21, 4 மே 2014 (UTC) Y ஆயிற்று ஆனால் மொழிபெயர்ப்பு வார்ப்புரு இடுமளவிற்கு ஒன்றும் ஆங்கிலத்தில் இல்லையே அடிக்குறிப்புக்களில் இரண்டு தானே ஆங்கிலத்தில் இருந்தன.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:24, 4 மே 2014 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஸ்ரீகர்சன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:46, 7 மே 2014 (UTC)
பதக்கம்
தினேஷ்குமார் பொன்னுசாமி அண்ணாவிற்கும் இரவி அவர்கட்கும் என் நன்றிகள். தொடர்ந்து பல்வழிகளிலும் முனைப்புடன் பங்களிப்பேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:44, 28 மே 2014 (UTC) கட்டுரைப் போட்டி - மார்ச் 2014
நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:40, 5 சூன் 2014 (UTC) வாழ்த்துக்கள்--சரவணன் பெ15:19, 6 சூன் 2014 (UTC) நன்றி--ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:38, 6 சூன் 2014 (UTC) தேவை தானா?unreferenced என்பதை சான்றில்லை என அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றுவது தேவை தானா? இது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். வார்ப்புருக்களின் தலைப்புகள் வேறு மொழிகளில் இருப்பதில் தவறில்லை. அனைத்து வார்ப்புருக்களுக்கும் மாற்றப் போகிறீர்களா? அப்படியாயின் ஆங்கிலத் தலைப்பில் உள்ள பல்லாயிரக்கணக்கான வார்ப்புருக்களையும் நீக்கி விட்டு தமிழ்த் தலைப்புகளாக மாற்றி விடலாமா?--Kanags \உரையாடுக 21:07, 9 சூன் 2014 (UTC)
சான்றில்லை > unreferencedசான்றில்லை, unreferenced இவை இரண்டும் ஒன்றே. தொடர்ந்தும் இவ்வாறு unreferenced என்பதை சான்றில்லை என மாற்ற வேண்டாம். --AntonTalk 17:33, 10 சூன் 2014 (UTC)
நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்கவனத்திற்கு, நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோளை தொகுப்பை நீக்கவும், மீளமைக்கவும் செய்துள்ளீர்கள். இவ்வாறு செய்வது முறையல்ல. முடிந்தவிடயங்கள் நீக்கப்படாது இங்குள்ளவாறு பரணேற்றப்பட வேண்டும். மீளமைத்தல் பயன்பாட்டை இங்கு பார்க்கவும். நன்றி. --AntonTalk 17:58, 12 சூன் 2014 (UTC)
உதவி தேவைவணக்கம் ஸ்ரீகர்சன் நாடுகள் வாரியாக அரபு நாளிதழ்கள் பட்டியல் எனும் கட்டுரையை List of Arab newspapers எனும் ஆங்கில கட்டுரையுடன் இணைத்திட முடியல்ல தம்பி --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 06:38, 13 சூன் 2014 (UTC)
குறுங்கட்டுரைகள்சிறீகர்சன், குறுங்கட்டுரைகள் பகுப்பில் தற்போது 3500 இற்கு மேல் கட்டுரைகள் சேர்ந்து விட்டன. பொதுவாக இவ்வாறான பகுப்பில் கட்டுரைகளை உப பகுப்புகளினுள் தான் சேர்க்க வேண்டும். தகுந்த உப பகுப்புகளுக்குள் இனி மேல் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தகுந்த உபபகுப்புகள் இல்லாவிட்டால் அவற்றை தகுந்த வார்ப்புருக்கள் மூலம் உருவாக்குங்கள். இவ்வாறான வேலைகளைச் செய்தவற்கு தானியங்கிகளை அணுகுங்கள். பயனர் செயரத்தினா போன்றோர் தானியங்கிகள் வைத்துள்ளார்கள். இன்னும் பலரிடம் உள்ளது. அவர்களைக் கொண்டு செய்யுங்கள். அல்லது நீங்களே தானியங்கியை எவ்வாறு இயக்குவது என்பதைக் கற்று ஒரு தானியங்கிக் கணக்கை உருவாக்குங்கள். இனிமேல் இவ்வாறான தொகுப்புகளை உங்கள் கணக்கில் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 08:00, 13 சூன் 2014 (UTC)
மு.ப.க இற்றைமு.ப.க இற்றைப்படுத்தலுக்கு நன்றி. இது தொடர்பில் சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன். இது தொடர்பில் பிற பயனர் கருத்து கேட்க விரும்பின் பொருத்தமான இடத்தில் இது தொடர்பில் வினவுங்கள்.
--AntonTalk 17:07, 16 சூன் 2014 (UTC)
AWBAWB, தானியக்கத் தொகுப்புகளை உங்கள் கணக்கில் இருந்து செய்வதை உடனே நிறுத்த வேண்டுகிறேன். இது குறித்து ஏற்கனவே உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் உள்ளது. தனியாக தானியங்கிக்கு என ஒரு கணக்கு தொடங்கி விண்ணப்பியுங்கள். நன்றி. - இரவி
12:47, 19 சூன் 2014 (UTC) தடையை விலக்கி வைத்துள்ளேன். தானியங்கித் தொகுப்புகளைத் தற்காலிக நிறுத்துவதற்கு வேறு வழியில்லாமலேயே கணக்கைத் தடை செய்ய வேண்டி வந்தது. இதனை உங்கள் மீதான தடையாக எண்ண வேண்டாம். எந்தக் கட்டுரையிலும் தானியங்கியைக் கொண்டு சிறு தொகுப்புகள் செய்வதில் சிக்கல் இல்லை. ஆனால். ஆயிரக்கணக்கான ஒரே மாதிரியான கட்டுரைகளில் மாற்றங்களைச் செய்யும் போது, ஒரே தொகுப்பில் ஒரு பக்கத்துக்கான அனைத்து மாற்றங்களையும் செய்யுமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது தேவையற்ற தொகுப்பு எண்ணிக்கையைத் தவிர்க்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:52, 19 சூன் 2014 (UTC)
உதவிவணக்கம், ஹோட்டல்கள் குறித்த கட்டுரைகளில் (தி பார்க், சென்னை, ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல், தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்) தகவற்பெட்டிகளை (ஆவி கட்டுரைகளிலிருந்து) இணைக்கமுடியவில்லை. தவி ல் அவற்றுக்கானத் தகவற் பெட்டி இல்லையா அல்லது வேறு ஏதாவது தொழிற்நுட்பக் மாற்றங்கள் தேவையா என்று தெரியவில்லை. உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:56, 21 சூன் 2014 (UTC)
உங்கள் இருவருக்கும் நன்றி. நான் ஆங்கில விக்கியிலிருந்து தகவற்பெட்டியை காப்பி&பேஸ்ட் கொடுத்து தொகுத்தால் தகவற்பெட்டி தோன்றாமல் சிவப்பு நிறத்தில் ’வார்ப்புரு: ....’ எனத் தெரிந்தது. ஏன், என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. (இன்று ’தி பார்க்’ கட்டுரைக்கு முயன்றேன். முன்பொருநாள் ’ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டல்’ கட்டுரைக்கு முயற்சி செய்தேனென நினைக்கிறேன்) இப்பொழுது எனது டெஸ்ட் பக்கத்தில் முயற்சி செய்து பார்த்தால் சரியாகத் தோன்றுகிறது. மற்றுமொரு உதவி, ’ஹோட்டல்’ என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டுரைகளுக்கான பகுப்பினை உருவாக்க உதவியாக இருக்கும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:14, 21 சூன் 2014 (UTC)
கட்டுரைப் போட்டி - ஏப்ரல் 2014
கட்டுரைப் போட்டி - ஏப்ரல் 2014
கட்டுரைப் போட்டி - மே 2014
கட்டுரைப் போட்டி - மே 2014
ஒரே நாளில் நான்கு பதக்கங்கள் ! அடுத்து வாகையாளருக்கு எனச் சிறப்புப் பதக்கம் ஒன்று வடிவமைத்துக் கொண்டு வருகிறேன். முன் கூட்டிய வாழ்த்துகள் !--இரவி (பேச்சு) 13:27, 24 சூன் 2014 (UTC)
மு.ப.க இற்றை - மீண்டும் நினைவூட்டல்அடுத்து இடம்பெறவிருக்கும் கட்டுரை எவை என்பதை முன்னமே அறியத்தாருங்கள். முன்னறிவிப்பில்லாமல் திடீர் திடீரென முதற்பக்கத்தில் காட்சிப்படுத்த வேண்டாம். பரிந்துரைத்து மறுப்பில்லாதவிடத்தே கட்டுரைகளை மு.ப. காட்சிப்படுத்தவும். எ.கா: இவ்வார மு.ப. கட்டுரை '''பிழை காட்டு: <ref> குறிச்சொல் உள்ளது, ஆனால் <references/> குறிச்சொல் காணப்படவில்லை''' என்று ஆயத்தமற்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. --AntonTalk 19:29, 24 சூன் 2014 (UTC)
வடிவமைப்பு உதவி தேவைவணக்கம் தம்பி ஸ்ரீகர்சன் வலைவாசல் துடுப்பாட்டம் பக்க ஐசிசி தரவரிசை பகுதியை வடிவமைப்பு செய்து தர முடியுமா நன்றி அன்புடன் --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 07:50, 25 சூன் 2014 (UTC)
2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்வணக்கம், சிறீகர்சன். 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். நன்றி. --இரவி (பேச்சு) 19:29, 30 சூன் 2014 (UTC) இந்த விவரங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தால் தெரியப்படுத்துங்கள். இல்லை எனில், உடன் அனுப்பி வைத்து விட்டு இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 14:46, 30 சூலை 2014 (UTC) முதற்பக்கக் கட்டுரைகள்இவ்வாரம் இடம்பெற்ற தமிழ் அச்சிடல் பற்றிய கட்டுரை ஏற்கனவே முதற்பக்கத்தில் இடம்பெற்று விட்டது. நல்ல கட்டுரைகள் மீண்டும் இடம்பெறுவதில் தவறில்லை. ஆனாலும் புதிய கட்டுரைகள் இல்லாத பட்சத்தில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. தவறாமல் முதற்பக்கத்தை இற்றைப் படுத்துவதற்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 20:52, 15 சூலை 2014 (UTC)
ஐயம்...வணக்கம்! ==வாழ்க்கைக் குறிப்பு== என இருப்பதை == வாழ்க்கைக் குறிப்பு == என நீங்கள் மாற்றுவதன் நோக்கம் என்ன? இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதனை அறிய ஆவல். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:25, 16 சூலை 2014 (UTC)
தானியங்கித் தொகுப்புகள்?சிறீகர்சன், உங்கள் அண்மைய தொகுப்புகள் பல AWB தானியங்கித் தொகுப்புகள் போல் தெரிகிறது. தெளிவுபடுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, ஒரே நிமிடத்தில் நான்கு, ஐந்து வெவ்வேறு சிறு பக்கங்களில் பல்வேறு சிறு தொகுப்புகள் செய்துள்ளீர்கள். மனித முறையில் இவ்வாறு செய்வது சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏற்கனவே இவ்வாறு செய்வதில்லை என்று உறுதி மொழி அளித்ததுடன் உங்கள் தானியங்கி வேண்டுகோளும் நிலுவையில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது. நன்றி.--இரவி (பேச்சு) 19:02, 16 சூலை 2014 (UTC)
சிறீகர்சன், துப்புரவுப் பணிகளில் உதவுவதற்கு நன்றி. https://meta.wikimedia.org/wiki/User:TMg/autoFormatter பின்வருமாறு கூறுகிறது: "Auto-Formatter is a user script that semi-automatically fixes more than 200 common errors..." இந்த semi-automatically என்ற தன்மை தான் தானியங்கித் தொகுப்போ என்ற ஐயத்தைக் கிளப்பியது. AWB பயன்படுத்துவது மட்டும் தான் தானியங்கித் தொகுப்புக்கணக்கில் வரும் என்றில்லை. பைத்தான் நிரல் பயன்படுத்தி ஏவப்படும் பணிகள் முதற்கொண்டு, ஒவ்வொரு பக்கத்துக்கும் பயனர் நேரடியாகச் சென்று தொகுக்காத பணிகள் அனைத்தும் தானியங்கிப் பணிகள் தாம். எனினும், இந்த autoFormatter நிரல் ஒவ்வொரு பக்கத்திலும் மனித ஊடாட்டத்தைக் கோருவதால் இதனை முழுமையான தானியங்கித் தொகுப்பாக கருத முடியாதுள்ளது. Hot Cat, தொகுப்பிணைப்பி ஆகியவற்றோடு ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. இனி, இவ்வாறான தொகுப்புகளைச் செய்யும் போது சிறு தொகுப்பு என குறியுங்கள். தொகுப்புச் சுருக்கத்தில் Autoformatter பயன்படுத்தி விக்கி குறியீடுகள் திருத்தம் என குறிப்பிடுங்கள். இவ்வாறு முன்பே செய்திருந்தால் இத்தொகுப்புப் பணி பற்றிய குழப்பம் வந்திருக்காது. இந்த நடைமுறையில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து இருந்தால் தொடர்ந்து உரையாடுவோம். மா. செல்வசிவகுருநாதன், இந்த நிரல் சில மாற்றங்களைத் தவிர்ப்பதற்கான வழி வகைகளைக் கூறுகிறது. ஆனால், பகுதி-தானியக்கமான பணியில் ஒட்டுமொத்தமாக எல்லா மாற்றங்களையும் செய்து விட்டுப் போவதில் தவறில்லை. ஏதேனும் தவறு இருந்தால் சுட்டலாம். பயன் என்ன என்ற நோக்கில் பார்ப்பது சிரமம். ஒரு நிரலாளரின் பார்வையில் இருந்து இவ்வாறான விக்கிக் குறியீடுகள் ஒழுங்குடன் இருப்பது முக்கியமாகப் படலாம். இவ்வாறான மாற்றங்கள் ஆங்கில விக்கிப்பீடியாக்களில் செய்யப்படுவனவே.--இரவி (பேச்சு) 05:10, 17 சூலை 2014 (UTC)
வேண்டுகோள்...2014 பொதுநலவாய விளையாட்டுக்களின் பதக்க நிலவரம் - கவனம்; இப்போது பெரிய அளவில் மாற்றம் செய்யாதீர்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:02, 28 சூலை 2014 (UTC)
வேண்டுகோள்விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 27, 2014 முதல் கட்டுரையில் கனக சிறீதரன் கூறிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுகிறேன். அத்துடன் அதைக் கவனித்து மீள் பரிசீலித்து பிழைகளையும் சரியாக்க வேண்டுகிறேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:12, 28 சூலை 2014 (UTC)
முதலாம் ஆண்டு பங்களிப்பு நிறைவு பதக்கம்
உதவிடேவிட் சில்வர்மேன் கட்டுரை பகுப்பு:தொடர்பிழந்த இணைப்புகளைக்கொண்ட அனைத்துக் கட்டுரைகள் பகுப்பில் தானாகவே இணைந்துள்ளது. இதன் காரணம் எனக்குத் தெரியவில்லை. சரி செய்துதரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:25, 12 ஆகத்து 2014 (UTC)
விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:21, 12 ஆகத்து 2014 (UTC) கிறு,கின்று,ஆநின்றுஸ்ரீகர்சன், நான் (வரு)கிறது என்று எழுதும் இடங்களில் எல்லாம் (வரு)கின்றது என திருத்தி வருகிறீர்கள். நிகழ்காலத்தைக் குறிக்க கிறு, கின்று,ஆநின்று என மூன்றும் பயன்படுத்தலாம் என படித்துள்ளேன். இருப்பினும் இலக்கணத்தில் தெளிவு பெற உங்களை நாடுகி(ன்)றேன். --மணியன் (பேச்சு) 12:33, 27 ஆகத்து 2014 (UTC)
உதவிவணக்கம். இவருக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:07, 16 செப்டம்பர் 2014 (UTC) முதற்பக்கக் கட்டுரைகள்கர்சன், முதற்பக்கக் கட்டுரை வார்ப்புருவை உருவாக்கும் போது,
மாற்றம் மீள்விப்புநீங்கள் செய்திருந்த ஒரு மாற்றத்தை மீள்வித்திருக்கிறேன். முதலில், இரு சொற்களுக்கிடையே ஒரு இடைவெளி கட்டாயம் விட வேண்டும். மேலும், நான் எனது தட்டச்சுக் கருவி மூலமே - என்ற குறியீட்டை எழுதுகிறேன். இதனை நீங்கள் மாற்ற வேண்டியது என்ன அவசியம். உருள்கூர்ந்து இவ்வாறான மாற்றங்களை வேண்டுமானால் தானியங்கி கருவி மூலம் செய்யுங்கள். உங்கள் பயனர் கணக்கில் செய்ய வேண்டாம். முன்னரும் உங்களுக்கு இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 20:06, 15 அக்டோபர் 2014 (UTC)
பகுப்புகள் நீக்கம்தம்பி, மக்களவை தொடர்பான பகுப்புகளை கட்டுரைகளில் இருந்து தேவையில்லாமல் நீக்கியிருக்கிறாய். பின்னர், வார்ப்புருவை பகுப்பின் பக்கத்தில் இணைத்திருக்கிறாய். இதன் மூலம் விளையும் நன்மை என்ன? மூல பகுப்பை பார்த்தாயா? அதே பகுப்பு அதற்கே துணை பகுப்பாகி சுழற்சி முறையில் செல்கிறது. பகுப்புகளை கட்டுரையில் இருந்து நீக்குவதால் பலனில்லை. மொத்தமாக பகுப்புகளை நீக்குவதற்கு முன்னர் ஒரு முறை கேட்டிருக்கலாம். :(-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:39, 19 அக்டோபர் 2014 (UTC)
மீண்டும் எச்சரிக்கைஇவ்வாறான திருத்தங்களை தானியங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து திருத்துங்கள். உங்கள் பயனர் கணக்கில் திருத்த வேண்டாம்.--Kanags \உரையாடுக 07:48, 23 அக்டோபர் 2014 (UTC)
இவ்வாறு நீங்கள் விக்கிக்குறியீடுகளை மாற்றுவதென்றால் அனைத்து 63,000 கட்டுரைகளிலும் இந்த மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனை ஏன் தானியங்கியாக செய்ய முடியாது? ஆங்கில விக்கியில் இவ்வாறான தொகுப்புகளை பெருந்தொகையில் செய்வதற்கு சாதாரண கணக்கில் அனுமதிக்க மாட்டார்கள். எச்சரிக்கையுடன் தடுக்கப்படுவார்கள். அதற்காகவே எச்சரிக்கை விடுத்தேன். இங்கு என்ன உரை திருத்தம் செய்திருக்கிறீர்கள்?--Kanags \உரையாடுக 08:43, 24 அக்டோபர் 2014 (UTC)
Kanags, autoformatter தொகுப்புகள் பற்றி ஏற்கனவே இங்கு உரையாடி இருக்கிறோம். சிறீகர்சன், மறவாமல் சிறு தொகுப்பு என்று குறியுங்கள். நன்றி. பி. கு, உங்கள் பேச்சுப் பக்கம் நீண்டு கொண்டே போகிறது. பரணில் ஏற்றலாமே :)--இரவி (பேச்சு) 19:30, 1 நவம்பர் 2014 (UTC)
மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்வணக்கம், Shrikarsan! நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) உங்களின் கவனத்திற்கு...வெளியிணைப்புகள் என்பது சரிதானே?! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 10 நவம்பர் 2014 (UTC) உதவிஅம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள் இக் கட்டுரையின் தகவற்பெட்டியின் தோற்றத்தில் உள்ள சிக்கலைக் கொஞ்சம் சரிசெய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:46, 11 நவம்பர் 2014 (UTC)
ஆசியாஆசியா முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரையா???, பார்க்க: காட்சிப்படுத்தப்பட்டதாக நீக்கியுள்ளீர்கள். விளக்கவும். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 04:59, 9 திசம்பர் 2014 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு
விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்புவணக்கம் Shrikarsan!
பதக்கம்
என்னுடைய விக்கியன்பு ஒழுங்காக வேலை செய்யவில்லை விக்கிபுயல் என்பதற்கு பதிலாக சிகரம் தொட்ட பதிவர் என்ற பதக்கமே சரி. தகவற்சட்டத்தை சரிபார்க்கவும் குறிப்பாக பரப்பளவு ஏன் 3 என்று காட்டுகிறது எனத் தெரியவில்லை --குறும்பன் (பேச்சு) 18:13, 4 சனவரி 2015 (UTC)
சிறப்புக் கட்டுரையாக்கம்தகவலுக்காக: ஆ.வி.யில் சிறப்புக் கட்டுரையாக்கம் பொதுவாக சில முறைகளைத் தாண்ட வேண்டும். அவையாவன Good article > Peer review > Featured article nomination. இதில் Good article கட்டயமில்லை ஆனால் Peer review கட்டாயமானது. இதனை பயனர் வெளியில் வைத்திருக்காது கட்டுரையின் பேச்சு வெளிக்கு நகர்த்துங்கள். பேச்சு:பிலிப்பீன்சு/நக1 என்று இருக்கலாம். (நக = நல்ல கட்டுரை) உதாரணத்திற்கு நான் அண்மையில் செய்த நல்ல கட்டுரைக்கான மதிப்பு GA1. ஆனால் Peer review, Featured article nomination என்பன விக்கியின் பிரதான பக்கங்களிலேயே துணைப்பக்கங்களாக இருக்கும். --AntonTalk 07:59, 8 பெப்ரவரி 2015 (UTC)
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள்
அன்டன் அவர்களே பாடசாலை பரீட்சைகள் மற்றும் க.பொ.த சா/த காரணமாக என்னால் அதிக நேரம் இங்கு பங்காற்ற முடியவில்லை. இது தொடர்பாக என் பங்களிப்பை அவ்வப்போது தரத் தயாராக உள்ளேன். நன்றி--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:26, 15 ஏப்ரல் 2015 (UTC) பூட்டிய வார்ப்புருகள்சிறீகர்சன், பூட்டிய வார்ப்புருகள் பட்டியல் ஏதும் இருக்கிறதா? இதில் எவற்றை மேம்படுத்த விரும்புகிறீர்கள் என்று தெரிவித்தால், தங்கள் பணி முடியும் வரை திறந்து வைக்க உதவுகிறேன். தங்களைப் போன்று இன்னும் பல வார்ப்புரு உருவாக்குநர்கள் தங்கள் ஆர்வத்தைத் தெரிவிக்கும் போது வார்ப்புரு தொகுப்பாளர்களுக்கான அணுக்கத்தை உருவாக்குவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:05, 14 ஏப்ரல் 2015 (UTC)
மற்ற மொழி விக்கிப்பீடியாக்களில் நுட்ப உதவி தேவைசிறீகர்சன், மற்ற மொழி விக்கிப்பீடியர்கள் சிலருக்கு நுட்ப உதவி தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இங்கு பாருங்கள். அவ்வப்போது இந்த நுட்ப உதவி மன்றத்தைக் கவனித்து உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:16, 23 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your helpHello Shrikarsan, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC) தானியங்கி வரவேற்புவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:21, 7 மே 2015 (UTC) விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புவணக்கம்! சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:10, 8 சூலை 2015 (UTC) பதக்கம்
வார்ப்புரு உதவிஇந்த வார்ப்புருவைக் கவனிக்க முடியுமா? விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர் பக்கத்தில் கோரிக்கைகளின் கீழுள்ள பயனர் பெயர்களுக்கண்மையில் <dot-separator> எனத் தோன்றுகிறது. --மதனாகரன் (பேச்சு) 10:56, 18 ஆகத்து 2015 (UTC)
இப்போது சரியாகி விட்டது. நன்றி. --மதனாகரன் (பேச்சு) 11:32, 18 ஆகத்து 2015 (UTC) கையொப்பம்தங்கள் கையொப்பத்தில் தோன்றும் #ifexist, #invoke போன்ற குறிச்சொற்களின் பயன்பாட்டை அறியத் தரமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 12:27, 20 ஆகத்து 2015 (UTC)
முன்னிலையாக்கர்வணக்கம். உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. --AntanO 13:29, 20 ஆகத்து 2015 (UTC)
ஒரு வேண்டுகோள்உங்கள் பக்கத்திலுள்ள பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றாமல் நிரலைப் பயன்படுத்திச் சுருக்கியுள்ளீர்கள். பழைய உரையாடல்களை ஏற்ற நேரமெடுப்பதால் கைப்பேசியில் புதிய உரையாடல்களைப் படிக்கக் கடினமாக உள்ளது. உங்கள் பழைய உரையாடல்களைக் காப்பகத்தில் ஏற்றினால் உதவியாக இருக்கும். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 04:51, 2 செப்டம்பர் 2015 (UTC)
Module:HtmlBuilderஆ.வி.யில் Module:HtmlBuilder பார்த்தீர்களா? சில நாட்களாக வழு நிலவரங்களைக் கவனிக்கவில்லை. --AntanO 15:48, 10 செப்டம்பர் 2015 (UTC)
உதவிநேரங் கிடைக்கும்போது வார்ப்புரு:Chem ஐச் சரிசெய்து தரமுடியமா? சல்பேற்று என்ற பக்கத்திலும் சிக்கல் எழுந்துள்ளது. SO42- என்று வரவேண்டிய இடத்தில் O4S என்று வருகின்றது. --மதனாகரன் (பேச்சு) 05:25, 14 செப்டம்பர் 2015 (UTC) Y ஆயிற்று ஆண்டன் சரிசெய்துள்ளார். --மதனாகரன் (பேச்சு) 06:22, 14 செப்டம்பர் 2015 (UTC)
காமன்சுக்குதமிழ் விக்கியில் நீங்கள் தரவேற்றிய உங்கள் சொந்தப் படிமங்களை அவற்றைப் பொதுவில் விடுவதாக இருந்தால், நீங்களே பொதுவகத்தில் மீண்டும் தரவேற்றலாம். அவை அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டால், இங்குள்ள படிமங்களை நீக்க படிமங்களில் {{nowcommons}} என்ற வார்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:17, 20 செப்டம்பர் 2015 (UTC)
நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)
புதிய வார்ப்புரு சோதனைக்கு அழைப்புவார்ப்புரு பேச்சு:Taxobox என்பதில் ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். உதவுக! --த♥உழவன் (உரை) 13:04, 1 திசம்பர் 2015 (UTC) பதக்கம்
நன்றி மதனாகரன் அண்ணா (நிரல் சோதனை மேற்கொண்டமைக்கு) சரியாகவே வேலை செய்கிறது!--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 05:54, 1 சனவரி 2016 (UTC)
Y ஆயிற்று. ஆனால், தற்போது பதக்கம் அளிப்பதற்கான விக்கியன்பு இதயம் புலப்படவில்லை. ஒவ்வொரு பக்கம் திறக்கும் போதும் பெயர், அறிவிப்புச் சின்னங்களுக்கு அருகே புதிதாக ஒரு விக்கியன்பு இதயம் தொடர்பாக உள்ள இணைப்புகள் விரிந்து சுருங்குகின்றன. இதனைச் சோதித்துப் பார்த்து சரி செய்ய வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 15:04, 1 சனவரி 2016 (UTC)
நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:57, 26 மார்ச் 2016 (UTC) நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் ஒரு நாளே உள்ளது.--இரவி (பேச்சு) 13:11, 27 மார்ச் 2016 (UTC) விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புவணக்கம்! சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :) தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 27 சூலை 2016 (UTC) விக்கியன்பு 2.0 சரி பாருங்கள்விக்கியன்பு 2.0 சரி பாருங்கள். பதக்கம் அளிக்கும் போது வழுக்கள்/பிழைகள் தென்படுகின்றன. --இரவி (பேச்சு) 06:59, 15 ஆகத்து 2016 (UTC) Wikimedia-LKHello! As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list. The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka. revertமீளமைக்கும்போது தொகுத்தல் சுருக்கத்தில் காரணம் தெரிவிக்க வேண்டும். --~AntanO4task (பேச்சு) 05:48, 10 மே 2017 (UTC)
நான் வார்புரு இட்டால் அதனை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் முரண்பட்டதை அறிந்திருக்கலாம். மீளமைப்பதும் மற்ற பயனருக்கு தாக்கம் ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? தர்க்க ரீதியாக யாரும் உரையாடலாம். இங்கு தர்க்கித்தது யார்? அல்லது உங்களுக்கு வந்தால் இரத்தம். மற்றவருக்கு என்றால்..... என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் குற்றம் காண வேண்டும் என்ற மனநிலையா? நான் என்ன செய்தாலும் அது தவறு. அப்படித்தானே?--AntanO 13:51, 10 மே 2017 (UTC) கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புஅன்புள்ள ஸ்ரீகர்சன், உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல். 2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன். இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்: தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன். நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்: இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது. 2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது. அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று. ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும். இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும். வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:42, 10 மார்ச் 2018 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersGreetings, The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page. You can also verify your eligibility using the AccountEligiblity tool. MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC) Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters. தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்புவணக்கம்! ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி! - விழா ஏற்பாட்டுக் குழு விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்புவிக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்புவணக்கம்! செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்! தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி! - ஒருங்கிணைப்பாளர்கள் செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்புவணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G |