பழைய நகரம் (ஐதராபாத்து, இந்தியா)
தெலங்கானாவில் உள்ள சுவருடைய நகரம் / From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத்தின் பழைய நகரம் (Old City of Hyderabad) என்பது பொ.ச. 1591ஆம் ஆண்டில் குதுப் ஷாஹி சுல்தான் முஹம்மது குலி குதுப் ஷா அவர்களால் மூசி ஆற்றங்கரையில் கட்டப்பட்டது. இது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் சுவர் நகரமாகும். பழைய நகரத்தைச் சுற்றி ஒரு கோட்டைச் சுவர் இருந்தது. அவற்றில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்டன. [3] தக்காணப் பகுதிகளின் முகலாய ஆளுநரான முபாரிஸ் கான் 1712ஆம் ஆண்டில் நகரத்தை பலப்படுத்தியிருந்தார். அதை ஐதராபாத்தின் நிசாமும் தொடர்ந்து விரிவுபடுத்தினார்.[4]
பழைய நகரம், ஐதராபாத்து | |
---|---|
சுவர் நகரம் | |
அடைபெயர்(கள்): முத்துக்களின் நகரம், மினார்களின் நகரம்[1] City of Lakes[2] | |
ஆள்கூறுகள்: 17.366°N 78.476°E / 17.366; 78.476 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
பிராந்தியம் | தக்காணம் |
நிறுவப்பட்டது | 1592 |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, ஐதராபாத்து பெருநகர மேம்பாட்டு ஆணையம் |
• மேயர் | கத்வால் விஜயலட்சுமி |
• ஆணையாளர் | எம். மகேந்தர் ரெட்டி, இந்திய ஆட்சிப் பணி |
• மக்களவை உறுப்பினர் | அசதுத்தீன் ஒவைசி |
பரப்பளவு | |
• மொத்தம் | 260 km2 (100 sq mi) |
ஏற்றம் | 536 m (1,759 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 xxx |
தொலைபேசி இணைப்பு எண் | 91–40, 08413, 08414, 08415, 08418, 0845 |
வாகனப் பதிவு | TS 07,08,09, 10, 11, 12, 13, 22, 23, 24 |
திட்ட நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி, குலி குதுப் ஷா நகர மேம்பாட்டு ஆணையம் |
தட்பவெப்ப நிலை | இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
மழை பொழிவு | 603 மில்லிமீட்டர்கள் (23.7 அங்) |
சராசரி ஆண்டு வெப்பநிலை | 26.0 °C (78.8 °F) |
சராசரி கோடை வெப்பநிலை | 35.9 °C (96.6 °F) |
சராசரி குளிகால வெப்பநிலை | 23.5 °C (74.3 °F) |
இணையதளம் | www |
பழைய நகரத்தின் மையத்தில் சார்மினார் உள்ளது. மேலும் இப்பகுதியில் ஷா அலி பண்டா, ஏகத்புரா, தபீர்புரா, அப்சல் குஞ்ச், மொகல்புரா, மலக்பேட்டை, பாலாக்ணுமா உள்ளிட்ட நகரத்தின் முக்கிய சுற்றுப்புறங்கள் உள்ளன. இன்று, ஐதராபாத்து நகரத்தின் எல்லைகள் பழைய நகரத்தின் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவடைந்துள்ளது. மேலும் நெரிசலான பழைய நகரம் ஹைடெக் நகரத்துடன் பலதரப்பட்ட ஐதராபாத்தின் அடையாள மையமாக உள்ளது. [5] [6] [7] இப்பகுதி ஒரு சுற்றுலா இடமாகவும், ஐதராபாத்து முஸ்லிம் கலாச்சாரத்தின் இதயமாகவும் உள்ளது.