பவேரியா
From Wikipedia, the free encyclopedia
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும்[4]. நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
பவேரியா
Freistaat Bayern (இடாய்ச்சு மொழி) Freistoot Bayern (பவேரிய மொழி) | |
---|---|
பண்: Bayernhymne (இடாய்ச்சு மொழி) "Hymn of Bavaria" | |
ஆள்கூறுகள்: 49°04′43″N 11°23′08″E | |
நாடு | செருமனி |
தலைநகரம் | மியூனிக் (München) |
அரசு | |
• முதன்மை அதிபர் | மார்கஸ் சோடர் (சி எஸ் யூ) |
பரப்பளவு | |
• மொத்தம் | 70,550.19 km2 (27,239.58 sq mi) |
மக்கள்தொகை (2019-12-31)[1] | |
• மொத்தம் | 1,31,24,737 |
• அடர்த்தி | 186/km2 (480/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | DE-BY |
GRP (nominal) | €633 பில்லியன் (2019)[2] |
GRP per capita | €48,000 (2019) |
ம.மே.சு. (2018) | 0.956[3] மிக அதிகம் · 16 இல் 5வது (௧௬ இல் ௫ வது) |
இணையதளம் | www |
பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது.[5]
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது.[6] ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.[7]