பாசீர் பூத்தே
From Wikipedia, the free encyclopedia
பாசீர் பூத்தே (மலாய் மொழி: Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh ; சீனம்: 巴西富地; ஜாவி: ڤباسير بوتيه) என்பது மலேசியா, கிளாந்தான், பாசீர் பூத்தே மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாசீர் பூத்தே எனும் பெயரில் ஒரு மாவட்டமும் உள்ளது. நாடாளுமன்றத் தொகுதியின் பெயரும் பாசீர் பூத்தே.
விரைவான உண்மைகள் பாசீர் பூத்தே, நாடு ...
பாசீர் பூத்தே | |
---|---|
Pasir Puteh | |
நகரம் | |
பாசீர் பூத்தே நகர நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 5°50′N 102°24′E | |
நாடு | Malaysia |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | பாசீர் பூத்தே மாவட்டம் |
தொகுதி | பாசீர் பூத்தே |
உள்ளூராட்சி | பாசீர் பூத்தே மாவட்ட மன்றம் |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அகமட் அடிலி யாசின் (Ahmad Adlee Bin Yasin) |
பரப்பளவு[1] | |
• மொத்தம் | 433.8 km2 (167.5 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 1,37,400 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 16xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
மூடு
கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசீர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே சமயத்தில் பாசீர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது.