பிராங்க் கேப்ரியோ
From Wikipedia, the free encyclopedia
பிரான்செசுகோ கேப்ரியோ (Francesco Caprio, பிறப்பு நவம்பர் 24, 1936) என்பவர் ஒரு அமெரிக்க நீதிபதியும், அரசியல்வாதியும் ஆவார், இவர் ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உயர் கல்விக்கான ரோடு தீவு ஆளுநர் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். காட் இன் பிராவிடன்சு என்ற நிகழ்ச்சியில் இவரது நீதித்துறைப் பணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. [3][4] பார்க்கிங் வார்சு என்ற அமெரிக்க போக்குவரத்து விதிமீறல் தொடர்பான உண்மைநிலை நிகழ்ச்சி தொடரிலும் தோன்றினார்.
விரைவான உண்மைகள் பிராங்க் கேப்ரியோ, ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ...
பிராங்க் கேப்ரியோ | |
---|---|
2018 இல் பிராங்க் கேப்ரியோ | |
ரோடு தீவு, பிராவிடென்சு நகராட்சிக்குரிய நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | |
பதவியில் 1985 – சனவரி 2023 | |
பின்னவர் | சான் லோம்பார்டி[1] |
வார்டு 13 பிராவிடன்சு நகர மன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962–1968 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரான்செசுகோ கேப்ரியோ நவம்பர் 24, 1936 (1936-11-24) (அகவை 87) பெடரல் கில், பிராவிடன்சு, ரோடு தீவு, ஐ.அ |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி[2] |
துணைவர் | சாய்சு இ. கேப்ரியோ |
பிள்ளைகள் | 5 |
Military service | |
கிளை/சேவை | ஐக்கிய அமெரிக்க இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1954–1962 |
அலகு | ரோட் தீவு இராணுவ தேசிய காவலர் |
மூடு
2017 ஆம் ஆண்டில், இவரது நீதிமன்ற தீர்ப்பு காணொளிகள் சமூக வலைதளங்களில் பிரபலமடைந்தன, இதில் 15 மில்லியனுக்கு மேலான பார்வைகளை பெற்றார். [5][6] 2022 ஆம் ஆண்டில், காட் இன் பிராவிடன்சு நிகழ்ச்சியின் பார்வைகள் 500 மில்லியனை நெருங்கியது. [7]