புனித பேதுரு பேராலயம்
From Wikipedia, the free encyclopedia
புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்[1]. இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் "பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் "பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். இப்பெருங்கோவில் பின்-மறுமலர்ச்சிக்கால (Late Renaissance) கலைப்பாணியில் அமைந்த எழில்மிகு இடம் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு[2].
விரைவான உண்மைகள் புனித பேதுரு பேராலயம் Papal Basilica of Saint Peter Basilica Sancti Petri (இலத்தீன்)Basilica Papale di San Pietro in Vaticano (இத்தாலியம்), அடிப்படைத் தகவல்கள் ...
புனித பேதுரு பேராலயம் Papal Basilica of Saint Peter Basilica Sancti Petri (இலத்தீன்) Basilica Papale di San Pietro in Vaticano (இத்தாலியம்) | |
---|---|
புனித பேதுரு பேராலயத்தின் உள் தோற்றம். ஜொவான்னி பவுலோ பன்னீனியால் வரையப்பட்டது. | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | வத்திக்கான் நகரம் |
புவியியல் ஆள்கூறுகள் | 41°54′8″N 12°27′12″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1626 |
நிலை | உயர் பேராலயம் (Major Basilica) |
இணையத் தளம் | (இத்தாலியம்) |
மூடு