புலிச்சுறா
From Wikipedia, the free encyclopedia
புலிச்சுறா (Galeocerdo cuvier[2]) என்பது கடலில் வாழக்கூடிய மீன் இனங்களில் ஒன்றாகும். கலியோசெர்தோ (வழுவன்சுறா) குடும்பத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனம் இதுவாகும். பொதுவாக “கடல் புலி” என்று அழைக்கப்படுகிறது. ஒப்பீட்டளவில் பெரிய கொன்றுண்ணிகளான இவற்றில், பெண் புலிச்சுறாக்கள் ஐந்து (5) மீட்டர் (16 அடி 5 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியவை. பொதுவாக இவை மிதவெப்பமண்டலம் மற்றும் வெப்ப மண்டல நீரில், குறிப்பாக மத்திய பசுபிக் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன. இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினை ஒத்திருப்பதால் இது புலிச்சுறா என அழைக்கப்படுகிறது. இந்த ஆழ்கோடுகள் சுறா முதிர்ச்சியடைந்த பின் மங்கி விடுகின்றன.[3]
புலிச்சுறா புதைப்படிவ காலம்: முற்கால இயோசீன் முதல் தற்காலம் வரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | குருத்தெலும்பு மீன்கள் |
துணைவகுப்பு: | அடுக்கச் செவுள் மீன்கள் |
பெருவரிசை: | |
வரிசை: | கார்கெரைனிபார்மீசு |
குடும்பம்: | |
பேரினம்: | கலியோசெர்தோ (வழுவன்சுறா) யொகாண்ணஸ் பீட்டர் முல்லர், பிரீட்ரிக் குஸ்டாவ் யாக்கப் ஹென்ல 1837 |
இனம்: | க. குவியே (G. cuvier) |
இருசொற் பெயரீடு | |
கலியோசெர்தோ குவியே Galeocerdo cuvier பிரான்சுவா பெரோன், சார்ல அலெக்சாந்த்ர் லசூவர் | |
புலிச்சுறா காணப்படும் கடற்பகுதிகள் | |
வேறு பெயர்கள் | |
ஸ்குவாலஸ் குவியே, Squalus cuvier பெரோன் மற்றும் லசூவர், 1822 |