பேர்கன்
From Wikipedia, the free encyclopedia
பேர்கன் (Bergenⓘ) நோர்வேயில் இரண்டாவது பெரிய நகரமாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு காலகட்டத்தில், நோர்வேயின் தலைநகரமாகவும் பேர்கன் இருந்தது. நோர்வேயின் வடமேற்கு கரையோரத்திலுள்ள ஓர்டலாந்து (Hordaland) மாவட்டத்தில் பேர்கன் நகரம் அமைந்திருப்பதுடன், ஓர்டாலாந்து மாவட்டத்தின் ஆட்சியக மையமும் இதுவேயாகும்.
பேர்கன் | |
---|---|
நாடு | நோர்வே |
மாநகராட்சி | பேர்கன் |
வட்டாரம் | வெஸ்ட்லான்ட் |
மாவட்டம் | மேற்கு நோர்வே |
நிறுவல் | 1070 |
அரசு | |
• நகரத் தந்தை | குணார் பாக்கி |
பரப்பளவு | |
• நகரம் | 465 km2 (180 sq mi) |
• நகர்ப்புறம் | 94.03 km2 (36.31 sq mi) |
• Metro | 2,755 km2 (1,064 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 3,08,900 |
• நகர்ப்புறம் | 2,89,300 |
• பெருநகர் | 4,76,600 |
இனங்கள் | பேர்கனர் |
இனக்குழுக்கள்[1] | |
• நோர்வேயர்கள் | 89.4% |
• போலந்தர் | 1.2% |
• ஈராக்கியர் | 0.6% |
• வியட்நாமியர்கள் | 0.5% |
• சிலி மக்கள் | 0.4% |
நேர வலயம் | நடு ஐரோப்பிய நேரம் (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | நடு ஐரோப்பிய கோடை நேரம் (ஒசநே+2) |
இணையதளம் | http://www.bergen.kommune.no |
2011 ஒக்டோபர் 1 இல் உள்ள கணக்கெடுப்பின்படி பேர்கனின் மக்கள்தொகை 261,705 ஆக உள்ளது.[2] நோர்வே புள்ளிவிபர திணைக்களம் பேர்கன் பொருளாதாரப் பகுதியின் மக்கள்தொகை 2008 சனவரி கணக்கெடுப்பின்படி 378,818 என வரையறுத்துள்ளது.[3]
பேர்கன் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக விளங்குவதுடன், 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரங்கள் எனப் பெருமைப்படுத்தப்பட்ட ஒன்பது ஐரோப்பிய நகரங்களில் ஒன்று என்ற பெருமையையும் கொண்டுள்ளது[4].
பேர்கன் நகரானது ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன், ஐரோப்பிய நகரங்களிலேயே அதிக மழையைப் பெறும் நகரமாக முன்னர் அறியப்பட்டிருந்ததால், “குடையுடன் கூடிய நகரம்”"Umbrella". Bergens Tidende. 15. oktober 2016. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04. {{cite web}}
: Check date values in: |date=
(help) என்ற செல்லப் பெயரையும் கொண்டிருந்தது. முன்னொரு காலத்தில் குடைகளை பணமிட்டு பெற்றுக் கொள்ளக்கூடிய இயந்திரங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவை சரியாக வெற்றியளிக்காததால் பின்னர் கைவிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது[5].