பைனான்சியல் டைம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
தி பைனான்சியல் டைம்ஸ் (ஆங்கிலம்: The Financial Times) என்பது வணிகம் மற்றும் பொருளாதாரச் செய்திகளை வெளியிடும் சர்வதேச ஆங்கில நாளிதழ் ஆகும். 1888 இல் ஜெம்ஸ் ஸரிடன் மற்றும் ஹோரடோ பாட்டம்லே என்பவர்களால் தொடங்கப்பட்டு, 1884 இல் தொடங்கப்பட்ட பைனாசியல் நியூஸ் என்கிற ஒத்த வகைப் போட்டிப் பத்திரிக்கையுடன் இணைக்கப்பட்டது. 2011 நவம்பரில், பி.டபிள்யூ.சி கணிப்பின்படி தி பைனான்சியல் டைம்ஸ் இதழானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.2 மில்லியன் மக்களால் உலகமுழுதும் வாசிக்கப்படுகிறது. FT.com தளத்தில் பதிவு செய்த பயனர்கள் 4.5 மில்லியனும்[2] இணையச் சந்தாதாரர்கள் 910,000 பேரும் உள்ளனர்[3] சீனாவில் மட்டும் 1.7 மில்லியன் பதிவுபெற்ற பயனர்கள் உள்ளனர்.[4] உலகமுழுதும் பைனாசியல் டைம்ஸ் நாளிதழானது ஒருநாளைக்கு 234,193 பிரதிகள் (அதில் 88000 பிரதிகள் ஐக்கிய இராஜ்யம்) 2014 ஜனவரி கணக்கின்படி விநியோகம் செய்யப்படுகிறது.[5] 2014 பிப்ரவரி இல் உலகம் முழுக்க மொத்த விற்பனை 224,000 பிரதிகளாக இருந்தது. 2013 அக்டோபர் இல் அச்சு விற்பனையும், இணைய விற்பனையும் மொத்தமாக 629,000 பிரதிகளாக, 125 ஆண்டு வரலாற்றில் அதிக விநியோகம் இருந்தது.[6] 2016 டிசம்பர் மாதத்தில் அச்சு இதழ் விற்பனையானது 193,211 பிரதிகள் என்று பத்து சதவிகிததிற்கும் கீழே குறைந்தது.[7]
வடிவம் | அகலத்தாள் |
---|---|
உரிமையாளர்(கள்) | தி நிக்கி |
ஆசிரியர் | லயனில் பார்பர் |
நிறுவியது | 9 சனவரி 1888; 136 ஆண்டுகள் முன்னர் (1888-01-09) |
தலைமையகம் | ஒன் சவுத்வார்க் பிரிஜ் ரோடு, லண்டன் ஐக்கிய இராஜ்யம் |
விற்பனை | 185,747 (as of மார்ச் 2018)[1] |
ISSN | 0307-1766 |
இணையத்தளம் | www |
நாடு | ஐக்கிய இராஜ்யம் |
2015 ஜூலை 23 இல் தி நிக்கி என்ற நிறுவனம் பியர்சன் நிறுவனத்திடமிருந்து £844m ($1.32 பில்லியன்) மதிப்பிற்கு பைனான்சியல் டைம்ஸ் இதழை விலைக்கு வாங்கியது.[8] On 30 November 2015 Nikkei completed the acquisition.[9]