மலேசிய சீனர்
மலேசியாவில் வாழும் சீன வம்சாவளி மக்கள் / From Wikipedia, the free encyclopedia
மலேசியச் சீனர் (Malaysian Chinese, பகாசா மலேசியா: கௌம் சீனா மலேசியா; எளிய சீனம்: 马来西亚华人; மரபுவழிச் சீனம்: 馬來西亞華人; பின்யின்: Mǎláixīyà Huárén), அல்லது சீன மலேசியர் என்பவர்கள் சீன மரபுவழி மலேசியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இங்கு முதல் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை குடியேறிய ஹான் சீனர்களின் சந்ததிகளாவர். 2010 நிலவரப்படி இவர்கள் மலேசிய மக்கள்தொகையில் 24.6% ஆகும்.[4]
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
| |||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(6,960,900[1] 24.6% of the Malaysian population (2010)[2]) | |||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||
கோலாலம்பூர் • பினாங்கு • ஜொகூர் • பேராக் | |||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||
மலேசிய மண்டாரின் • கண்டோனீசு • ஃபூசூ ஹக்கா சீனம் • ஹொக்கைன் • தியோசௌ மலேசிய ஆங்கிலம் • மலாய் | |||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||
பௌத்தம் • டாவோயிசம் • கிறித்தவம் சமயசார்பின்மை மற்றும் பிற [3] |
மூடு
மலேசியச் சீனர்கள் நன்கு வளர்ச்சியடைந்த நடுத்தர மக்கள் இனமாவர். மலேசியாவின் படித்த வகுப்பினரில் இவர்களது விழுக்காடு கூடுதலாக உள்ளது. மலேசியாவின் தொழில் மற்றும் வணிகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மலேசியப் பொருளாதாரத்தில் 60% இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் வருமானவரியில் 90% இவர்களது பங்காக உள்ளது.[5][6][7][8]