மான்சா மூசா
மேற்கு ஆப்பிரிக்க அரசர் / From Wikipedia, the free encyclopedia
மூசா I (c. 1280[சான்று தேவை] - c. 1337 ), அல்லது மான்சா மூசா (Mansa Musa), இஸ்லாமிய மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி பேரரசின் மான்சா (அரசர்) ஆவார்.
மூசா 1324 இல் ஹஜ் யாத்திரைக்காக ஒரு பெரிய பரிவாரத்துடன் மக்காவிற்கு சென்றார். வழியில், அவர் கெய்ரோவில் நேரத்தை செலவிட்டார், அங்கு இவர் ஆடம்பரமாக பலருக்கு மதிப்புமிக்க பரிசுகளை வழங்கினார். இதனால் அங்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தங்கத்தின் விலையானது குறிப்பிடத்தக்க விலைச்சரிவைக் கண்டது. இது இஸ்லாமிய உலகின் கவனத்தை ஈர்த்தது.