முத்துசாமி லெட்சுமணன்
பாரதிதாசன் பல்கலைக்கழக நேரியல் அல்லா இயக்கவியல் பேராசிரியர் / From Wikipedia, the free encyclopedia
முத்துசாமி லட்சுமணன் (பிறப்பு 25 மார்ச் 1946) என்பார் இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இராமண்ணா ஆய்வாளர் ஆவார். இவர் இராசா இராமண்ணா ஆய்வு நிதியுதவி உள்ளிட்ட பல ஆய்வு நிதியுதவியினைப் பெற்றுள்ளார். இந்திய அணு சக்தி துறை, அலெக்சாண்டர் வோன் ஹம்போல்ட் நிதியுதவி, அறிவியல் மேம்பாட்டுக்கான ஜப்பான் சமூக நிதியுதவி, நபீல்டு அரச கழக அமைப்பு நிதியுதவி, இந்தியத் தேசிய அறிவியல் அகடமியின் முது விஞ்ஞானி பிளாட்டினம் தின நிதியுதவி உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
பிறப்பு | 25 மார்ச்சு 1946 (1946-03-25) (அகவை 78) பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாகாணம், |
---|---|
வதிவு | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
Alma mater |
|
துறை ஆலோசகர் |
|
அறியப்பட்டது | நேரியல் அல்லா இயக்கவியல் - மற்றும் முரளி-லட்சுமணன்-சுவா (எம்.எல்.சி.) சர்க்யூட் வளர்ச்சி |
இவரது நேரியல் அல்லா இயக்கவியல் - மற்றும் முரளி-லட்சுமணன்-சுவா (எம்.எல்.சி.) சர்க்யூட் வளர்ச்சி அதிகமாக இயற்பியல் ஆராய்ச்சியாளர்களிடம் நன்கு அறியப்படுகிறது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த இந்திய அறிவியல் கழங்காளான, இந்திய தேசிய அறிவியல் கழகம், தேசிய அறிவியல் கழகம் இந்தியா - தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவியலாராகவும், அத்துடன் உலக அறிவியல் கழகம் மற்றும் ராயல் சுவீடன் அறிவியல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வு மன்றம், 1989 ஆம் ஆண்டில் இவரின் இயற்பியல் அறிவியல் பங்களிப்புகளுக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை வழங்கியது.[1] [குறிப்பு 1]