மூவார்
ஜொகூர், மூவார் மாவட்டத்தின் தலைப்பட்டினம் / From Wikipedia, the free encyclopedia
மூவார் அல்லது பண்டார் மகாராணி (மலாய்; ஆங்கிலம்: Muar அல்லது Bandar Maharani சீனம்: 麻坡), என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தின் வரலாற்றுத் தலைப்பட்டினம் ஆகும். இந்த நகரம் 'பண்டார் மகாராணி' என்று தற்போது அழைக்கப் படுகிறது. இது ஓர் அரச நகரமாகும். ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு, பத்து பகாட், குளுவாங் நகரங்களுக்கு அடுத்து நான்காவது பெரிய நகரமாக விளங்குகிறது.[1]
விரைவான உண்மைகள் மூவார்Muar Bandar Maharani Bandar Maharani Bandar Dirajaبندر مهراني بندر دراج, நாடு ...
மூவார்
Muar Bandar Maharani Bandar Maharani Bandar Diraja بندر مهراني بندر دراج | |
---|---|
ஜொகூர் | |
குறிக்கோளுரை: திறமையுடன் நம்பகமாய் மாறும் வளம் Cekap Amanah Dinamik Makmur | |
ஆள்கூறுகள்: 2°3′00″N 102°34′00″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | மூவார் மாவட்டம் |
ஊராட்சி | 1885 |
நகராட்சி | 2001 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | மூவார் நகராட்சி |
• தலைவர் | சமீல் அசுனி அப்துல்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,376 km2 (531 sq mi) |
ஏற்றம் | 36.88 m (121 ft) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 3,14,776 |
• அடர்த்தி | 230/km2 (590/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 84000 |
தொலைபேசி எண்கள் | 06-95xxxxx - 06-98xxxxx |
போக்குவரத்துப் பதிவெண்கள் | Jxx |
இணையதளம் | www www |
மூடு
ஜொகூர் மாநிலத்தில் வட மேற்கே அமைந்து இருக்கும் இந்த நகரத்தின் மாவட்டமும் மூவார் என்றே அழைக்கப் படுகிறது. முன்பு இந்த நகரம் தங்காக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2006-ஆம் ஆண்டிற்குப் பிறகு, மூவார் என்பது தனி நகரமாகவும், ஒரு தனி மாவட்டமாகவும் பிரகடனம் செய்யப்பட்டது.[2]