மேல் நைல் மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
மேல் நைல் மாநிலம் (Upper Nile), சூடான் நாட்டின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு 9 சூலை 2011 அன்று நிறுவப்பட்ட தெற்கு சூடான் நாட்டின் 13 மாநிலங்களில் ஒன்றாகும். இம்மாநிலம் தெற்கு சூடான் வடக்கில் பெரிய நைல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. வெள்ளை நைல் இம்மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது. இம்மாநிலத்தைச் சுற்றி யூனிட்டி மாநிலம் மற்றும் ஜோங்லாய் மாநிலம் எல்லைகளாக உள்ளது. 77,823 சதுர கிலோமீட்டர்கள் (30,048 sq mi) பரப்பளவு கொண்ட மேல் நைல் மாநிலத்தின் தலைநகரம் மாலக்கல் நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் மேல் நைல், நாடு ...
மேல் நைல் | |
---|---|
மாநிலம் | |
தெற்கு சூடான் நாட்டின் வடக்கில் மேல் நைல் மாநிலத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
ஆள்கூறுகள்: 09°46′N 32°44′E | |
நாடு | தெற்கு சூடான் |
பிரதேசம் | பெரிய மேல் நைல் |
தலைநகரம் | மாலக்கல் |
அரசு | |
• ஆளுநர் | புத்தோக் அயாங் குர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 77,823.42 km2 (30,047.79 sq mi) |
மக்கள்தொகை (2008 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 9,64,353 |
• அடர்த்தி | 12/km2 (32/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (மத்திய ஆப்பிரிக்க நேரம்) |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.478[1] low |
மூடு