மைத்திரேயர்
From Wikipedia, the free encyclopedia
மைத்திரேயர் என்பவர் உலகத்தில் அவதரிக்க போகின்ற வருங்கால புத்தர் ஆவார். இவர் இன்னும் பூரண புத்தநிலையை அடையாத காரணத்தினால் மைத்திரேயர் போதிசத்துவர் என அழைக்கப்படுகிறார்.
மேலதிகத் தகவல்கள் பெயர்கள் ...
பெயர்கள் | |
---|---|
சமஸ்கிருதம்: | मैत्रेय (மைத்ரேய) |
பாளி: | மேத்தேய |
சீனம் பெயர்: | 彌勒菩薩 (மீலே பூஸா) |
ஜப். பெயர்: | 弥勒菩薩 (மொரோகு பொசாட்ஸு) |
திபெ. பெயர்: | பிராம்ஸ் பா |
கொரிய. பெயர்: | 미륵보살 (மிருக் பொசால்) |
தாய் பெயர்: | ศรีอรายะ เมตไตรย์ (ஸ்ரீஆரய மேத்த்ராய்) |
Mongolian பெயர்: | Майдар (மைதார்) |
மூடு
சாக்கியமுனி புத்தருக்கு அடுத்து, இவ்வுலகில் மைத்திரேயர் அவதரித்து பூரண போதி நிலையை அடைந்து உண்மையான தர்மத்தை உபதேசிப்பாரென பௌத்தர்கள் நம்புகின்றனர். தேரவாத, மகாயான, வஜ்ரயான போன்ற அனைத்து பௌத்த மத பிரிவுகளும் மைத்திரேயரின் அவதாரத்தில் நம்பிக்கை வைத்துள்ளன.