ரூபன் பிளைஷர்
From Wikipedia, the free encyclopedia
ரூபன் சாமுவேல் பிளைஷர் (ஆங்கில மொழி: Ruben Samuel Fleischer) (பிறப்பு: அக்டோபர் 31, 1974) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர் மற்றும் இசை காணொளி இயக்குனர் ஆவார்.
விரைவான உண்மைகள் ரூபன் பிளைஷர் Ruben Fleischer, பிறப்பு ...
ரூபன் பிளைஷர் Ruben Fleischer | |
---|---|
பிறப்பு | ரூபன் சாமுவேல் பிளைஷர்[1] அக்டோபர் 31, 1974 (1974-10-31) (அகவை 49) வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், இசை காணொளி இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கோலி சாகூர் (தி. 2012) [2] |
மூடு
இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான 'சோம்பிலாண்ட்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், பின்னர் அதன் தொடர்ச்சியான 'சோம்பிலாண்ட்: டபுள் தாப்' (2019) ஆகியவற்றின் இயக்குனராக அறியப்படுகிறார்.[3] அதை தொடர்ந்து கேங்க்ஸ்டர் ஸ்குவாட்[4] மற்றும் அன்சார்ட்டட் போன்ற படங்களையும், 2018 ஆம் ஆண்டு முதல் அதே பெயரில் மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தைக் கொண்ட வெனம் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.[5] அத்துடன் பல தொலைக்காட்சி விளம்பரங்களையும், பல இசை காணொளிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.