விசைப்பொறி
இன்ஜின் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை ஆற்றலை பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற பொறிகளைப் பற்றியது. இயக்கியின் மற்ற பயன்பாடுகளுக்கு, இயக்கி என்பதைப் பாருங்கள்.
விசைப்பொறி (engine) அல்லது இயக்கி (motor) என்பது ஆற்றலை பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற ஓர் இயந்திரம் ஆகும்.[1][2]உள் எரி பொறிகளும் ( நீராவிப் பொறிகள்) போன்ற வெளி எரி பொறிகளும் உள்ளிட்ட வெப்ப எந்திரங்கள் எரிமத்தை எரித்து வெப்பத்தை உண்டாக்கி அவ்வாற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. மின்சார இயக்கிகள் மின்னாற்றலை இயந்திர இயக்கமாக மாற்றுகின்றன. காற்றழுத்த இயக்கிகள் அழுக்கத்திலுள்ள வளிமத்தை பயன்படுத்தி இயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. மேலும் சிறுவர் விளையாட்டுக் கருவிகளில் கடிகாரவகை இயக்கிகளில் தேக்கப்பட்ட மீள்மையாற்றலைப் பயன்படுத்துகின்றன. உயிரியல் அமைப்புகளில் தசைகளில் உள்ள மயோசின் போன்ற மூலக்கூற்று இயக்கிகள் வேதி ஆற்றலை இயக்கமுண்டாக்கப் பயன்படுத்துகின்றன.