விம்பிள்டன் கோப்பை
From Wikipedia, the free encyclopedia
விம்பிள்டன் பெருவெற்றி வரிப்பந்தாட்டப் போட்டிகள் டென்னிசு வரலாற்றின் மிகப் பழைமையான போட்டியாகும். வரிப்பந்தாட்டப் போட்டிகளில் அதிக மரியாதைக்குரியதாகும். 1877-ஆம் ஆண்டுமுதல் நடைபெற்றுவரும் இப்போட்டித் தொடர், ஆண்டுதோறும் சூன் மாதக்கடைசியில் தொடங்கி சூலையில் முடிவடைகிறது. ஆண்டின் மூன்றாவது கிராண்ட் சிலாம்/பெருவெற்றிப் போட்டித் தொடராகும். ஒவ்வோராண்டும் ஆஸ்திரேலிய ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் ஆகிய டென்னிஸ் கிராண்ட் சிலாம் போட்டிகள் நடைபெறுகின்றன. 1988-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓப்பன் கடினதரை ஆடுகளத்துக்கு மாறியபிறகு, விம்பிள்டன் மட்டுமே புல்தரையில் ஆடப்படும் ஒரே கிராண்ட் சிலாம் போட்டித் தொடராக உள்ளது. ஆண்டி முர்ரே (ஐக்கிய இராச்சியம்) மற்றும் செரீனா வில்லியம்ஸ் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோர் 2016-க்கான விம்பிள்டன் வாகையர்களாவர்.
விம்பிள்டன் வரிப்பந்தாட்டப் போட்டிகள் | ||
---|---|---|
பெருவெற்றி தொடர் (கிராண்ட் சிலாம்) | ||
இடம் | விம்பிள்டன் ஐக்கிய இராச்சியம் | |
கூடும் இடம் | அனைத்து இங்கிலாந்து புல்தரை வரிப்பந்தாட்டக் கழகம் | |
தரை | புற்றரை / வெளி | |
ஆண்கள் தேர்வு | 128S / 128Q / 64D | |
பெண்கள் தேர்வு | 128S / 96Q / 64D | |
பரிசுப் பணம் | £11,282,710 | |
அதிகாரபூர்வ இணையத்தளம் | ||
பெருவெற்றி (கிராண்ட் சிலாம்) தொடர்கள் | ||
விம்பிள்டன் போட்டிகளில் பலவித பாரம்பரியமான வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. போட்டியாளர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு உண்டு, வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்படுவர். மேலும், ஆட்டக்களங்களை சுற்றியுள்ள இடங்கள் விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்படுவதில்லை. 2009-ஆம் ஆண்டில் முக்கியமான மத்திய ஆட்டக்களத்தில் பின்னிழுக்கக்கூடிய கூரை கட்டப்பட்டது, இது மழை பெய்வதால் ஆட்டங்கள் தடைபடுவதைக் குறைக்கிறது.