வேதியியலுக்கான நோபல் பரிசு
From Wikipedia, the free encyclopedia
வேதியியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Chemistry) வேதியியலில் பல்வேறு பிரிவுகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பு வழங்கும் அறிவியலாளர்களுக்கு சுவீடனின் அரச அறிவியல் கழகத்தினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது ஆகும். சுவீடிய வேதியியலாளர் ஆல்பிரட் நோபலின் உயிலின் படி 1895 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்று. ஏனையவை இயற்பியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், மற்றும் அமைதி ஆகியவையாகும். இப்பரிசுகளை நோபல் நிறுவனம் நிருவகித்து வருகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் வேதியியலுக்கான நோபல் பரிசு, விளக்கம் ...
வேதியியலுக்கான நோபல் பரிசு | |
---|---|
விளக்கம் | வேதியியலில் ஈடிணையற்ற பங்களிப்பு |
நாடு | சுவீடன் |
வழங்குபவர் | ரோயல் சுவீடிய அறிவியல் கழகம் |
முதலில் வழங்கப்பட்டது | 1901 |
இணையதளம் | nobelprize.org |
மூடு
நோபல் பரிசு ஆண்டு தோறும் டிசம்பர் 10 ஆம் நாளன்று சுவீடனின் ஸ்டொக்ஹோல்ம் நகரில் வழங்கப்படுகிறது. வேதியியலுக்கான முதலாவது நோபல் பரிசு 1901 ஆம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த யாக்கோபுசு என்றிக்கசு வான்’ட் ஹோஃப் என்பவருக்கு வழங்கப்பட்டது.