2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம் (2022 ICC Men's T20 World Cup) என்பது 8-வது ஐசிசி இருபது20 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் ஆகும்.[3] இதன் போட்டிகள் 2022 அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆத்திரேலியாவில் நடைபெற்றன.[4] இத்தொடர் 2020-ம் ஆண்டே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் இத்தொடர் 2022-க்கு மாற்றப்பட்டது.[5] இத்தொடரை நடத்திய ஆத்திரேலியா நடப்பு வாகையாளராக உள்ளது.[6]
நாட்கள் | 16 அக்டோபர் – 13 நவம்பர் 2022 |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | பன்னாட்டு இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | குழுநிலை, வெளியேறுநிலை |
நடத்துனர்(கள்) | ஆத்திரேலியா |
வாகையாளர் | இங்கிலாந்து (2-ஆம் தடவை) |
இரண்டாமவர் | பாக்கித்தான் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 16[1] |
மொத்த போட்டிகள் | 45[2] |
தொடர் நாயகன் | சாம் கரன் |
அதிக ஓட்டங்கள் | விராட் கோலி (296) |
அதிக வீழ்த்தல்கள் | வனிந்து அசரங்கா (15) |
அலுவல்முறை வலைத்தளம் | aus2022 |
← 2021 2024 → |
முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை ஏழு இலக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்த பின்னர்,[7] இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணியாக பாக்கித்தான் ஆனது.[8] இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து பத்து இலக்குகள் வேறுபாட்டில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.[9][10] இரு அணிகளும் தங்களது இரண்டாவது ஐசிசி ஆண்கள் இ20 உலகக்கோப்பைப் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இருந்தன.[11][12] இறுதிப் போட்டியில், இங்கிலாந்து ஐந்து இலக்குகள் வித்தியாசத்தில் பாக்கித்தானை வீழ்த்தி தனது இரண்டாவது உலகக்கோப்பையை வென்றது.[13][14] இங்கிலாந்தின் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும்[15] போட்டியின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16]