குவைத்து
From Wikipedia, the free encyclopedia
குவைத் (Kuwait, அரபு மொழி: دولة الكويت), அதிகாரபூர்வமாக குவைத் நாடு (State of Kuwait) என்பது தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாரசீக வளைகுடாவின் வடமுனையில் அமைந்துள்ள குவைத் நாட்டின் தெற்கே சவூதி அரேபியாவும், வடக்கிலும் மேற்கிலும் ஈராக்கும் எல்லை நாடுகளாக உள்ளன. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 4 மில்லியன்கள் ஆகும்.[3]
குவைத் நாடு دولة الكويت தௌலத் அல்-குவைத் | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: அல்-நஷீத் அல்-வத்தனி | |
தலைநகரம் | குவைத் நகரம் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அரபு, ஜெர்மன் |
மக்கள் | குவைத்தி |
அரசாங்கம் | அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி[1] |
• அமீர் | சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா |
• பிரதமர் | ஜாபர் அல்-முபாரக் அல்-ஹாமது அல்-சபா |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியம் இடம் இருந்து | ஜூன் 19, 1961 |
பரப்பு | |
• மொத்தம் | 17,818 km2 (6,880 sq mi) (157வது) |
• நீர் (%) | சிறிய பகுதிகள் |
மக்கள் தொகை | |
• 2006 மதிப்பிடு | 3,100,000[2] (தகவல் இல்லை) |
• அடர்த்தி | 131/km2 (339.3/sq mi) (68வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $88.7 பில்லியன் (n/a) |
• தலைவிகிதம் | $29,566 (n/a) |
மமேசு (2004) | 0.871 Error: Invalid HDI value · 33வது |
நாணயம் | குவைத்தி தினார் (KWD) |
நேர வலயம் | ஒ.அ.நே+3 (AST) |
ஒ.அ.நே+3 (பயன்பாட்டிலில்லை) | |
அழைப்புக்குறி | 965 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | KW |
இணையக் குறி | .kw |
18ம், 19ம் நூற்றாண்டுகளில், குவைத் செல்வம் கொழிக்கும் ஒரு வணிக நாடாக இருந்தது.[4][5][6] பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டதை அடுத்து குவைத்தின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.[7] முதல் உலகப் போர்க் காலத்தில், உதுமானியப் பேரரசை குவைத் மன்னர் ஆதரித்ததை அடுத்து பிரித்தானியப் பேரரசு பொருளாதாரத் தடை விதித்தது.[8][9] 1919-20 இல் இடம்பெற்ற குவைத்-நஜித் போரை அடுத்து, சவூதி அரேபியா 1923 முதல் 1937 வரை பொருளாதாரத் தடை விதித்திருந்தது.[7] 1990 இல், குவைத் மீது ஈராக் படையெடுத்து தன்னுடன் இணைத்து வைத்திருந்தது. அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தலையீட்டை அடுத்து குவைத் விடுவிக்கப்பட்டது.[10]