செம்மறியாடு
From Wikipedia, the free encyclopedia
செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வளர்ப்புச் செம்மறியாடு | |
---|---|
இடாஹோவின் டூபியசுக்கு அண்மையில் காணப்படும் ஐக்கிய அமெரிக்கச் செம்மறியாடுகள் சோதனை நிலையம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | காப்ரினீ |
பேரினம்: | ஆவிஸ் |
இனம்: | ஆ. ஏரீஸ் |
இருசொற் பெயரீடு | |
ஆவிஸ் ஏரீஸ் L, 1758 | |
வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு செம்மறி ஆட்டிலிருந்து 45 கிலோ கம்பளி வெட்டு எடுக்கப்பட்டது.[1]
செம்மறி ஆடு வளர்ப்பானது உலகிலுள்ள பெரும்பாலான மனித குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. இதுவே பல நாகரீகங்களின் அடிப்படையாக அமைந்திருந்தது. புது யுகத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தெற்கு மற்றும் தென் மத்திய அமெரிக்க தேசங்கள் மற்றும் பிரித்தானியத் தீவுகள் ஆகியன ஆடு வளர்ப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆடுகளின் குழுவிற்கு மந்தை (herd or flock) எனவும் அதன் இளம் குட்டிக்கு கன்று (calf) எனவும் அழைக்கப்படுகின்றது.பண்ணையத் தொழில் வரலாற்றில் செம்மறியாடு ஒரு முக்கிய விலங்காக இடம்பெற்று வந்திருக்கிறது. மேலும் மனித கலாச்சாரத்துடனுடன் மிக நெருக்காமான இவ்விலங்கு திகழ்கிறது.