ஜேம்ஸ் போக்
1845 முதல் 1849 வரை இருந்த அமெரிக்க அதிபர் / From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் (நவம்பர் 2 1795–ஜூன் 15 1849) ஐக்கிய அமெரிக்காவின் 11 ஆவது குடியரசுத் தலைவர். இவர் மார்ச் 4, 1845 முதல் மார்ச் 4, 1849 வரை குடியரசுத் தலைவராக இருந்தார். இவர் வட கரோலினாவில் உள்ள மெக்லன்பர்க் வட்டத்தில் (கவுண்ட்டியில்) பிறந்தார் ஆனனல் பெரும்பாலும் டென்னிசியில் வாழ்ந்தார். அம் மாநிலத்தின் சார்பாளாராக இருந்தார். டெமாக்ரட்டிக் கட்சியைச் சேந்த இவர் ஐக்கிய அமெரிக்காவின் மக்களவையின் (கீழ் சட்ட மன்றத்தின்) அவைத்தலைவராகவும் பணியாற்றினார் (1835–1839). ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்கும் முன்னர் டென்னிசியின் ஆளுனராகவும் இருந்தார் (1839–1841) . போக் அவர்களின் வெளியுறவுக் கொள்கைகளில் சிறப்பு எய்தினார். பிரித்தானியாவுடன் முதலில் போர் தொடுப்பதாக மிரட்டி பின்னர் தணிந்து வடமேற்குப் பகுதியின் உரிமையை, பிரித்தனினிடம் இருந்து கூறு போட்டுப் பிரித்தார். மெக்சிக்க அமெரிக்கப் போரை வெற்றிகரமாக முடித்தார்.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜேம்ஸ் க்நாக்ஸ் போ(ல்)க் | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின்11வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4, 1845 – மார்ச் 4, 1849 | |
Vice President | ஜார்ஜ் டல்லாஸ் |
முன்னையவர் | ஜான் டைலர் |
பின்னவர் | சக்கரி தைலர் |
17வது மக்களவை மன்ற அவைத் தலைவர் | |
பதவியில் டிசம்பர் 7, 1835 – மார்ச் 4, 1839 | |
முன்னையவர் | ஜான் பெல் |
பின்னவர் | ராபர்ட் ஹண்ட்டர் |
11வது டென்னிசி ஆளுனர் | |
பதவியில் அக்டோபர் 14, 1839 – அக்டோபர் 15, 1841 | |
Lieutenant | எல்.ஹெச். கோ |
முன்னையவர் | நியூட்டன் கேனன் |
பின்னவர் | ஜேம்ஸ் சி. ஜோன்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 3, 1795 மெக்லன்பர்க் வட்டம், வடகரோலினா,வட கரோலினா |
இறப்பு | ஜூன் 15, 1849, அகவை 53 நாஷ்வில், டென்னிசி |
தேசியம் | அமெரிக்கன் |
அரசியல் கட்சி | டெமாக்ரட்டிக் கட்சி |
துணைவர் | சாரா சில்ட்ரஸ் போ(ல்)க் |
கையெழுத்து | |