நீர்மூழ்கிக் குண்டு
From Wikipedia, the free encyclopedia
நீரின் மேற்பரப்புக்கு மேலிருந்தோ அல்லது நீருக்கடியிலிருந்து ஏவப்பட்டு நீருக்கடியில் தானாக உந்திச் சென்று இலக்கைத் தாக்ககூடிய கணை நீர்மூழ்கிக் குண்டு (Torpedo) எனப்படுகிறது. இந்நீர்மூழ்கிக் குண்டுகள் இலக்கைத் தொட்டவுடன் அல்லது இலக்கை அண்மித்தவுடன் வெடிக்கக் கூடியன. நீர்கண்ணிகள் நீர்மூழ்கிக் குண்டை ஒத்தனவாயினும் இவை தானாக உந்திச் செல்லும் ஆற்றலைக் கொண்டிருப்பதில்லை. இவை கப்பல்கள் நீர்மூழ்கிக் கப்பல்கள், வான்கலங்கள் எனப் பலதரப்பட்ட இடங்களிலிருந்து ஏவப்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டாலும் தற்போது நீர்மூழ்கிக் கப்பல்களுக்கெதிராகவே முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |