கோடு (வடிவவியல்)
பூஜ்ஜிய அகலமும் ஆழமும் கொண்ட நேரான உருவம் / From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில் கோடு (அல்லது நேர்கோடு)(Line) என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு (தோராயமாக முடிவிலிக்குச் சமமாக) மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு வடிவவியல் உருவம் அல்லது பொருளாகும். அதாவது நீளமானதும் நேரானதுமான வளைகோடு, நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு புள்ளிகள் தேவை. அந்த இரண்டு புள்ளிகளுக்கு இடையேயான குறைந்த பட்ச தூரத்தின் பாதையில் நேர்கோடு அமையும். இரு கோடுகள் அதிக பட்சம் ஒரு புள்ளியில் தான் வெட்டி கொள்ள முடியும். இரு தளங்கள் அதிக பட்சம் ஒரு நேர்கோட்டில் தான் வெட்டி கொள்ள முடியும்.[1][2][3][4]