லுட்விக் பிராண்டில்
From Wikipedia, the free encyclopedia
லுட்விக் பிராண்டில் (Ludwig Prandtl, பிப்ரவரி 4, 1875 - ஆகத்து 15, 1953) என்பவர் செருமானிய அறிவியலாளராவார். அவர் படிப்படியான கணிதவியற் பகுப்பாய்வு முறைகளில் நிபுணர். அக்கணித முறைகளை காற்றியக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்குப் பயன்படுத்தினார். அவர் உருவாக்கிய கணித மாதிரிகளே வானூர்திப் பொறியியலின் அடிப்படைத் தத்துவங்களாக அறியப்படுகின்றன. 1920-களில் அவர் குறையொலிவேக மற்றும் ஒலியொத்தவேக காற்றியக்கவியலுக்கான அடிப்படையான கணிதவியல் பகுப்பாய்வு முறைகளைக் கண்டறிந்து மேம்படுத்தினார். எல்லைப்படலம், மெல்லிய-காற்றிதழ், மற்றும் ஏற்றுவரிக் கோட்பாடு ஆகியவை அவரது பங்களிப்புகளில் மிக முக்கியமானவை ஆகும். பிராண்டில் எண் என்பது அவரது பெயரால் வழங்கப்பெறும் பரிமாணமற்ற எண்ணாகும். இவரே, நவீன காற்றியக்கவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் லுட்விக் பிராண்டில், பிறப்பு ...
லுட்விக் பிராண்டில் | |
---|---|
Ludwig Prandtl | |
பிறப்பு | (1875-02-04)4 பெப்ரவரி 1875 ஃப்ரெய்சிங், ஜெர்மனி |
இறப்பு | 15 ஆகத்து 1953(1953-08-15) (அகவை 78) கோட்டிஞ்சென், ஜெர்மனி |
வாழிடம் | ஜெர்மனி |
தேசியம் | ஜெர்மானியர் |
துறை | காற்றியக்கவியல் |
பணியிடங்கள் | கோட்டிஞ்சென் பல்கலைக்கழகம் Technical School in Hannover |
கல்வி கற்ற இடங்கள் | Technical University of Munich |
ஆய்வு நெறியாளர் | August Föppl |
முனைவர் பட்ட மாணவர்கள் | Ackeret, Heinrich Blasius, Busemann, Nikuradse, Pohlhausen, Schlichting, Tietjens, Tollmien, von Kármán, and many others (85 in total). |
அறியப்படுவது | எல்லைப்படலம் பிராண்டில் எண் |
மூடு