வில்லியம் லாரன்ஸ் பிராக்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் லாரன்சு பிராக் (William Lawrence Bragg, 1 மார்ச்சு 1890 – 1 சூலை 1971) ஆத்திரேலியாவில் பிறந்த பிரித்தானிய இயற்பியலாளர். இயற்பியலில் எக்சு கதிர்கள் மூலமாகப் படிகங்களின் அமைப்பை ஆய்வு செய்ததுடன் எக்ஸ் கதிர் நிறமாலைமானி ஒன்றைக் கண்டு பிடித்ததற்காகவும் இவருடைய தந்தை வில்லியம் ஹென்றி பிராக்குடன் சேர்ந்து 1915 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். பிராக் விதியை உருவாக்கியவர்.
சர் லாரன்சு பிராக் Lawrence Bragg | |
---|---|
1915 இல் பிராக் | |
பிறப்பு | உவில்லியம் லாரன்ச்ய் பிராக் (1890-03-31)31 மார்ச்சு 1890 அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா |
இறப்பு | 1 சூலை 1971(1971-07-01) (அகவை 81) வால்ட்ரிங்ஃபீல்டு, இப்சுவிச்சு, சஃபோல்க், இங்கிலாந்து |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | |
கல்வி | புனித பீட்டர் கல்லூரி, அடிலெயிட் |
கல்வி கற்ற இடங்கள் | |
Academic advisors | |
அறியப்படுவது | எக்சு-கதிர் விளிம்பு விளைவு எக்சு-கதிர் நிறமாலையியல் எக்சு-கதிர் நுண்ணோக்கி பிராக் சமன்பாடு |
விருதுகள் |
|
துணைவர் | ஆலிசு ஒப்கின்சன் (1899–1989) |
குறிப்புகள் | |
இவர் வில்லியம் ஹென்றி பிராக்கின் மகன். 1919 வரை கேம்பிரிட்சில் முனைவர் பட்டம் தரப்படுவதில்லை. ஜெ. ஜெ. தாம்சன் மற்றும் வில்லியம் ஹென்றி பிராக் ஆகிய இருவருமே வில்லியம் லாரன்ஸ் பிராகிற்கு இணை வழிகாட்டிகள் ஆவர். |
இவர் 1941 இல் இங்கிலாந்தின் வீரராகச் (knight) சிறப்பிக்கப்பெற்றார். தற்சமயம் இவர் நோபல் பரிசு பெற்றோரில் மிகவும் இளையவர் ஆவார். அப்பரிசைப் பெற்றபோது அவருக்கு வயது 25 தான் ஆகியிருந்தது. 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேம்சு டி. வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்த மாபெரும் நிகழ்ச்சியின்போது பிராக் கேம்பிரிட்ஜில் உள்ள கேவெண்டிஷ் சோதனைக்கூடத்தின் இயக்குநராக இருந்தார். அச்சோதனைக் கூடத்தில்தான் வாட்சனும் கிரிக்கும் டி. என். ஏ அமைப்பைக் கண்டுபிடித்தனர்.