ஸ்கோடியா கடல்
தொன்முனைக் கடலின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
ஸ்கோடியா கடல் (Scotia Sea) என்பது தென்முனைப் பெருங்கடலின் வடக்கு விளிம்பில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலுடன் அதன் எல்லையில் அமைந்துள்ள ஒரு கடல் ஆகும். இதன் மேற்கில் டிரேக் பெருங்கடல் பெருவழி மற்றும் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் ஸ்கோடியா வில் எனப்படும் பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்கோடியா வில் பகுதியானது பல்வேறு தீவுகளை துணையாக கொண்ட கடலுக்கடியில் உள்ள ஒரு முகடு மற்றும் வில் தீவு அமைப்பு ஆகும். இவற்றால் இக்கடல் சூழப்பட்டுள்ளது. மேலும் இது ஸ்கோடியா தட்டுக்கு மேலே அமர்ந்திருக்கிறது. இதற்கு ஸ்கோடியா என்ற பயணக் கப்பலின் நினைவாக பெயர் இடப்பட்டது.