எசுப்பானியா
தென்மேற்கு ஐரோப்பிய நாடு / From Wikipedia, the free encyclopedia
எசுப்பானியா (Spain, /ˈspeɪn/ (கேட்கⓘ) ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ( கேட்க)) என்றழைக்கப்படும் எசுப்பானிய முடியரசு (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
எசுப்பானிய முடியரசு Reino de España ரெயினோ டே எஸ்பாஞா | |
---|---|
குறிக்கோள்: Plus Ultra (இலத்தீன்) "Further Beyond" | |
நாட்டுப்பண்: Marcha Real (எசுப்பானியம்) "இராச்சிய அணி நடை" | |
தலைநகரம் | மட்ரிட் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் |
இனக் குழுகள் | 89% எசுப்பானியர், 11% சிறுபான்மை இனக்குழுகள் |
மக்கள் | எசுப்பானியர் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி |
• அரசர் | ஆறாம் பிலிப்பு |
• அரசியல் தலைவர் | பெட்ரோ சான்செஸ் |
தோற்றம் | |
• ஒன்றியம் | 1469 |
• வம்ச ஒன்றியம் | 1516 |
பரப்பு | |
• மொத்தம் | 504,030 km2 (194,610 sq mi) (51வது) |
• நீர் (%) | 1.04 |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 45,200,737[1] (28வது) |
• அடர்த்தி | 90/km2 (233.1/sq mi) (106வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2007[2] மதிப்பீடு |
• மொத்தம் | $1.310 டிரில்லியன் (11வது) |
• தலைவிகிதம் | $33,700 (2007) (27வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2007[3] மதிப்பீடு |
• மொத்தம் | $1.439 டிரில்லியன் (8வது) |
• தலைவிகிதம் | $31,471 (2007) (26வது) |
ஜினி (2005) | 32[4] Error: Invalid Gini value |
மமேசு (2005) | 0.949 அதியுயர் · 13வது |
நாணயம் | ஐரோ (€) ³ (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET4) |
ஒ.அ.நே+2 (CEST) | |
அழைப்புக்குறி | 34 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | ES |
இணையக் குறி | .es, .cat5 |
|
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.