அப்பல்லோ திட்டம்
From Wikipedia, the free encyclopedia
அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் திட்ட மேலோட்டம், நாடு ...
திட்ட மேலோட்டம் | |
---|---|
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பொறுப்பான நிறுவனம் | தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா) |
தற்போதைய நிலை | completed |
திட்ட வரலாறு | |
திட்டக் காலம் | 1961–1972 |
முதல் பறப்பு | AS-201, February 26, 1966 |
பணிக்குழுவுடனான முதலாவது பறப்பு | அப்பல்லோ 7, அக்டோபர் 11–22, 1968 |
கடைசிப் பறப்பு | அப்பல்லோ 17, திசம்பர் 7–19, 1972 |
வெற்றிகள் | 16 |
தோல்விகள் | 2: அப்பல்லோ 1, அப்பல்லோ 13 (விண்கலம்) |
பகுதியளவிலான தோல்விகள் | 1: அப்பல்லோ 6 |
ஏவுதளம்(கள்) |
|
ஊர்தித் தகவல்கள் | |
ஊர்தி வகை | capsule |
பணிக்குழுவுடனான ஊர்தி(கள்) |
|
பணிக்குழுக் கொள்ளளவு | 3 |
ஏவுகலம்(கள்) |
|
மூடு