பினாங்கு தீவு மாநகராட்சி
பினாங்கு ஜார்ஜ் டவுன் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
பினாங்கு தீவு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Pulau Pinang; ஆங்கிலம்: City Council of Penang Island); (சுருக்கம்: MBPP) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். அத்துடன் பினாங்கு தீவை முழுமையாக இந்த மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது.[1]
விரைவான உண்மைகள் பினாங்கு தீவு மாநகராட்சிCity Council of Penang IslandMajlis Bandaraya Pulau Pinang, வகை ...
பினாங்கு தீவு மாநகராட்சி City Council of Penang Island Majlis Bandaraya Pulau Pinang | |
---|---|
Coat of arms | |
Flag | |
வகை | |
வகை | |
வரலாறு | |
முன்பு | ஜார்ஜ் டவுன் நகராட்சி மன்றம் |
தலைமை | |
மேயர் | ராஜேந்திரன் அந்தோனி (2023 - ) |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்: |
ஆட்சிக்காலம் | 1 மே 2021 - 30 ஏப்ரல் 2023 |
கூடும் இடம் | |
பினாங்கு மாநகராட்சி தலைமையகம் Penang City Hall George Town, Penang, Malaysia 4.59866°N 101.08992°E / 4.59866; 101.08992 | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 | |
அடிக்குறிப்புகள் | |
1976 வரை ஜோர்ஜ் டவுன் நகராட்சி மன்றம் (George Town City Council) என்றும்; பின்னர் 2014 வரை பினாங்கு தீவு நகராட்சி மன்றம் (Penang Island Municipal Council) என்றும் அறியப்பட்டது. |
மூடு
மலேசியாவின் பினாங்கு மாநில அரசாங்கத்தின் கீழ் பினாங்கு தீவு மாநகராட்சி உள்ளது. இந்த மாநகராட்சியின் அதிகார வரம்பு 306 சதுர கி.மீ. (118 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இந்த நகராட்சிக்கு 1957 சனவரி 1-ஆம் தேதி மாநகரத் தகுதி வழங்கப்பட்டது.[2][3]