மாநகராட்சி
இது இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் நிர்வாக தலைமையிடங்கள் ஆகும் / From Wikipedia, the free encyclopedia
மாநகராட்சி (municipal corporation) ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன.
இத்தகைய பெயரிடல் ஐக்கிய இராச்சியத்தில் தோன்றினாலும், இலண்டன் மாநகராட்சியைத் தவிர்த்து, அங்கு பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும் முந்தைய பிரித்தானிய காலனிகளிலும் இந்தியாவிலும் இந்தக் கருத்து கொள்கையளவில் மாநகர உள்ளாட்சி நிர்வாகத்தின் மையமாக உள்ளது.[1][2][3]