இந்தியக் குடியரசுத் தலைவர்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்திய அரசின் தலைவர் ஆவார் / From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்படும் இந்திய அரசின் தலைவர் ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். இந்தியாவின் முதல் குடிமகன் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். எனினும் இந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் சடங்கு நோக்கிலேயே அமைந்துள்ளன. பிரதமரும் அமைச்சரவையுமே செயல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஆவார், தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆவார்.
விரைவான உண்மைகள் இந்தியக் குடியரசுத் தலைவர் Bhārat ke Rāṣṭrapati, பதவி ...
இந்தியக் குடியரசுத் தலைவர்
Bhārat ke Rāṣṭrapati | |
---|---|
பதவி | அரசுத் தலைவர் |
வாழுமிடம் |
|
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் புதுப்பிக்கவல்லது |
அரசமைப்புக் கருவி | இந்திய அரசியலமைப்பு (பிரிவு 52) |
முதலாவதாக பதவியேற்றவர் | இராசேந்திர பிரசாத் (1950–1962) |
உருவாக்கம் | 26 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-26) |
முதலாமவர் | இராசேந்திர பிரசாத் |
துணை குடியரசுத் தலைவர் | இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் |
ஊதியம் | • ₹5,00,000 (US$6,300) (மாதத்திற்கு) • ₹60,00,000 (US$75,000) (ஆண்டுதோறும்)[1] |
இணையதளம் | presidentofindia |
மூடு