கோட்பிரீட் லைப்னிட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
கோட்பிரீட் லைப்னிட்ஸ் | |
---|---|
கிறித்தோபு பிராங்கி 1695 இல் வரைந்தது | |
பிறப்பு | (1646-07-01)1 சூலை 1646 லைப்சிக், சாக்சனி, புனித உரோமைப் பேரரசு |
இறப்பு | 14 நவம்பர் 1716(1716-11-14) (அகவை 70) அனோவர், புனித உரோமைப் பேரரசு |
கல்வி |
|
காலம் | 17--ஆம் அறிவொளிக் காலம் |
பகுதி | மேற்குலக மெய்யியல் |
பள்ளி |
|
ஆய்வறிக்கை | |
முனைவர் பட்ட ஆலோசகர் | Bartholomäus Leonhard von Schwendendörffer[7][8] |
ஏனைய ஆலோசகர்கள் |
|
குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
|
முக்கிய ஆர்வங்கள் | கணிதம், இயற்பியல், நிலவியல், மருத்துவம், உயிரியல், முளையவியல், நோய்ப்பரவலியல், விலங்கு மருத்துவம், தொல்லுயிரியல், உளத்தியல், பொறியியல், மொழியியல், மொழியறிவியல், சமூகவியல், மீவியற்பியல், நன்னெறி, பொருளியல், பண்ணுறவாண்மை, வரலாறு, அரசியல், இசைக் கோட்பாடு, கவிதை, ஏரணம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் |
|
செல்வாக்குச் செலுத்தியோர் | |
கையொப்பம் |
சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.[10] இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.